Link copied!
Sign in / Sign up
20
Shares

மனைவிகளுக்கு புரியாத / புரிந்து கொள்ளாத கணவரின் 6 பழக்கங்கள்

ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கென்று சில ஆசைகள் இருக்கும். எனவே, உங்கள் கணவருடன் வாழும் போது அவர்களின் ஒரு சில பழக்கங்களை பொறுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். இங்கே, கணவர்களுக்கு இருக்கும் சில பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை உங்கள் கணவருடன் நீங்கள் ஒப்பீட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

1 விளையாட்டு

அவர்கள் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருப்பது சற்றே எரிச்சலூட்டும் விஷயமாகும். அவருக்கு ஏன் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட விளையாட்டு அணியை பிடித்திருக்கிறது என்று உங்களால் புரிந்துக்கொள்ளவே முடியாது. அது மட்டும் தான் அவருக்கென்று கிடைக்கும் நேரம் என்றாலும், அவர் நண்பர்களுடன் சேர்ந்து போடும் குப்பைகளை நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பதால், அது உங்களுக்கு எரிச்சலூட்டலாம். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் அணி தோற்று விட்டால் மிகவும் சோகமாகி விடுவார்கள். அவர்களை சோகமாக பார்க்க உங்களால் முடியாது.

2 சுத்தம்

மனிதர்கள் குரங்கில் இருந்து தான் வந்தார்கள் என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ஆண்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். அவர்களால் தங்களையோ, தங்களை சுற்றி உள்ள இடத்தையோ நன்றாக கவனித்துக்கொள்ள முடியாது. அது அவர்களின் பத்து நாள் துவைக்காத சாக்ஸ், மாசக்கணக்கில் துவைக்காத ஜீன்ஸ் மற்றும் அழுக்கு படிந்து நாற்றமடிக்கும் டீ-ஷர்ட்களில் தெரியும். சுத்தம் என்ற வார்த்தை அவர்கள் அகராதிகளிலேயே கிடையாது.

3 வேலை

அவரின் அடிமைத்தனமான பழக்கங்களில் நல்ல பழக்கம் இதுவே. அவர் தனது வேலைக்காக அவரையே அர்பணிப்பவர். இதனால், சில நேரங்களில் வீட்டிற்கே வேலையை கொண்டுவந்து விடுவார். இது சில சமயம் கோபப்படுத்துவதாக இருந்தாலும், அவர் வீட்டிற்கு வேலைகளை கொண்டு வரவில்லை என்றால் அவரை பாராட்டுங்கள்.

4 வீடியோ கேம்கள்

என்ன தான் உங்கள் துணை ஒரு சிறுவனாக இருந்து, பெரிய மனிதனாக வளர்ந்தாலும், அவரின் இந்த வீடியோ கேம் ஆர்வம் மட்டும் குறையவே குறையாது. அவர் அதற்கு அடிமையாக இருப்பார். எந்த அளவிற்கு என்றால், அந்த வீடியோ கேமின் இசையை கேட்டு நீங்கள் அது என்ன விளையாட்டு என்று கண்டுபிடித்து விடுவீர்கள். தொலைக்காட்சியில் எந்த விளையாட்டுகளும் ( கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிண்டன், பேஸ்பால் ) இல்லை என்றால், அவர்களின் அடுத்த தேர்வு இந்த வீடியோ கேம்கள் தான்.

5 கார்கள் / பைக்குகள்

புதிதாக வெளிவந்த காரிலிருந்து, புதிய பிராண்ட்கள், புதிய பைக்குகள் அவர்களுக்கு ஒரு குஷியை தரும். அது அவரால் வாங்க முடியும் என்பதால் அல்ல. இது வரையில் பெண்களுக்கு புரியாத ஆண்களின் ஆசை கார்கள் மற்றும் பைக்குகள்.

6 டாய்லட் சீட்டை மூடாமல் இருப்பது

இந்த பழக்கம் எந்த ஆண்களுக்கும் வரவே வராத ஒன்று. இது உங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாகும். டாய்லட் சீட் மூடாமல் இருப்பதை பார்க்கும் போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இவையெல்லாம் இல்லை என்றாலும் உங்கள் வாழ்க்கை சலிக்க துவங்கிவிடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon