Link copied!
Sign in / Sign up
37
Shares

மழலைகளுக்கு கற்பிக்க வேண்டியவையும், கற்பிக்கும் முறைகளும்..!

குழந்தைகள் வளர்க்கையில், முதல் வருடத்தில் இருந்து பேச ஆரம்பிப்பர். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளோ சைகைகள் மூலம் தங்கள் கருத்துக்களை பெற்றோருக்கு புரிய வைக்க முயற்சிப்பர். பெற்றோர்கள், குழந்தை பேசுவதையும், அதன் சைகை மொழியையும் கேட்டு, அதனுடன் பேச வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய் மொழியோடு, இதர மொழிகளையும் குழந்தைக்குக் கற்பிக்க, குழந்தையின் முதல் 5 வருடங்களே சிறந்தது.ஏனெனில், குழந்தையின் மூளை வளர்ச்சி இந்த கால கட்டத்தில் எதையும் கற்கும் நிலையில் இருக்கும். 

3 வயது கால கட்டத்தில், குழந்தைகள் வாக்கியங்களைப் பேச ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளிடம் உங்களுக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும், பேசிப் பழகுங்கள்; நீங்கள் எத்தனை மொழிகளில் பேசினாலும், அனைத்தையும் எளிதில் புரிந்து கற்றுக் கொள்ளும் திறன் குழந்தையின் குட்டி மூளைக்கு உண்டு. பெற்றோர்களான நீங்கள் குழந்தையிடமும், உங்களுக்குள்ளும் பேசிக்கொள்கையில், பல மொழிகளில், பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கையில், குழந்தைகள் மொழிகளையும், எந்த சூழ்நிலையில் எவ்வகை மொழியை, என்ன வாக்கியங்களை உபயோகிக்க வேண்டும் என அறிவர்.

நீங்கள் அறிந்த அனைத்து மொழிகளிலும், குழந்தைகளுக்கு எண்களை எண்ண கற்றுக் கொடுங்கள். அதிக மொழி உங்களுக்கு தெரியவில்லையே என கவலையுறாமல், இணையத்தின் உதவியுடனும் குழந்தைக்குக் கற்பிக்கலாம்; இணையத்தில் பாடல்களைப் போட்டுக் காட்டுவது போல், பல மொழிகளில் பாடல்களையும், எண்களை எண்ணும் முறை பற்றியும், நடைமுறை பேச்சு வார்த்தைகளையும் காண்பிக்கலாம். குழந்தைகளும், இது போன்ற விஷயங்களை, அவர்களுக்கு பிடித்த வகையில் காட்டும் பொழுது விரைந்து கற்பர்.

இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொள்வதால், குழந்தைகள் குழம்பிவிடுவரோ என்ற கவலை வேண்டாம். ஏனெனில், குழந்தைகளால் அனைத்தையும் புரிந்து, பிரித்தறிய முடியும்; அப்படி இயலவில்லையெனினும் உதவி செய்ய பெற்றோரான நீங்கள் உடன் உள்ளீர்கள்.. இளம் வயதில், பல மொழிகளைக் கற்பதாலும், பல மொழிகள் தெரிந்திருப்பதாலும், குழந்தைகளிடம் தன்னம்பிக்கை மேலோங்கிக் காணப்படும்.

குழந்தைகள் பேசும் வார்த்தைகளில் தெளிவு பெற்ற பின், வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுக்கத் தொடங்குங்கள். நீங்கள் எழுத்துக்களைச் சொல்ல சொல்ல குழந்தைகளைத் திரும்பக் கூற வையுங்கள். ஒவ்வொரு மொழியும் பிரத்யேகமான ஓசையுடன் இருக்கும்; அதை குழந்தையை உணரச் செய்யுங்கள்.

 

குழந்தைகளுக்கு 4 வயது இருக்கையில், அவர்கள் பென்சில், குச்சி கொண்டு, தாள்களிலும், சிலேட்டுகளிலும் எழுத்து தொடங்குவர். குழந்தைகள் எழுத்துக்களைக் கற்க, வண்ண அட்டைகளில் எழுதிக் காட்டுவது, கணினி, அலைபேசி வாயிலாகக் கற்பிப்பது என வித விதமான முறைகளைக் கையாள்வது, நல்ல முன்னேற்றத்தைத் தரும். மொழிகளைக் கற்பிக்கையிலே, வடிவங்களை வரையவும், உபயோகிக்கும் அல்லது பயிலும் வார்த்தைகள் எத்தகையது, அவை வடிவமுடையதா எனக்கூறி அவற்றின் உருவங்களையும் வரைய ஊக்குவிக்கலாம்.

குழந்தைகளுக்கு, கருவில் இருக்கும் போது உங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், கருவிலிருந்து உருவாகி உங்கள் கைகளில் தவழ்க்கையில், உங்களால் இயன்ற அனைத்தையும் கற்றுக் கொடுத்து, சிறந்த குழந்தையை உருவாக்குவீராக பெற்றோர்களே..!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon