Link copied!
Sign in / Sign up
2
Shares

மலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா?

அன்னைகள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் இடத்திற்கு இடம் மாறுபடும்; வாழ்க்கைத்தரம், கலாச்சாரம் போன்றவை மாறுபடும். ஆனால், அன்னைகளின் பாசத்தில் மாற்றம் இருக்காது. எந்த ஊரில், மாநிலத்தில், நாட்டில் இருக்கும் அன்னையாயினும் அவர்தம் பாசம் ஒன்றே! விலங்குகளிலும் அன்னைகள் கொண்ட பாசம், மனிதரைப் போன்றதே! இப்படி இருக்க மலையாள அன்னைகள், குழந்தை வளர்ப்பில் கொண்டுள்ள விசித்திர குணாதிசியங்களை பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..!   

1. வேடிக்கை..

இந்த அன்னைகளுக்கு வாழ்க்கையே படம், டிவி சீரியல்கள் தான்; எந்நேரம் பார்த்தாலும் வீட்டில் தொலைக்காட்சி தொடர்கள் ஓடுவதையும், அதைப்பார்த்து அன்னை மனமுருகி, கண்ணீர் சிந்துவதையும் காண முடியும்..! அன்னைகள் பலர் தொடர்கள் பார்ப்பவர்கள் தான்; ஆனால், மலையாள அன்னைகள் அனைவர்க்கும் ஒருபடி மேல்..!

2. ஹையோ..

இந்த ஹையோ எனும் வார்த்தை, மலையாள அன்னைகள் பயன்படுத்தும் அணைத்து வாக்கியங்களிலும் நீங்காமல் இடம்பெறும். இதை அந்த அன்னை எத்தனை முறை பயன்படுத்தினார் என்பது எண்ணில் அடங்காதது.

3. குழந்தை..

குழந்தைகள் எப்படி இருந்தாலும், அதாவது குழந்தைகள் குண்டாகவே இருந்தாலும் அவர்களை மேலும் மேலும் உண்ணச்சொல்லி, உணவு டார்ச்சர் கொடுப்பர். மலையாள அன்னைக்கு குழந்தைகளின் வயிறு மட்டும் நிறைந்தால் போதாது, குழந்தை கழுத்து அல்லது தலை வரை நிரம்பி, பசி எனும் உணர்வே ஏற்படா வண்ணம் அவர்தம் குழந்தை இருத்தல் வேண்டும்..!

4. அலைபேசி அழைப்பு..!

மலையாள அன்னைகள், பொதுவாக தங்கள் குழந்தை வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாலே எங்கே இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? சாப்பிட்டாயா? என மணிக்கொருமுறை அல்லாமல் நிமிடத்திற்கு ஒருமுறை அலைபேசியில் அழைத்து, அன்புத் தொல்லை கொடுப்பர்..!

5. செல்லப்பெயர்கள்..!

குழந்தைக்கு முதலில் வைத்த பெயர், மனதில் தோன்றிய பெயர் என அநேக செல்லப்பெயர்களை குழந்தைக்கு வழங்கி, கூப்பிட்டு அக்குழந்தைக்கு எது தன் உண்மையான பெயர் என்ற சந்தேகத்தையே தோன்றச் செய்திடுவார், மலையாள அன்னை...! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon