Link copied!
Sign in / Sign up
1
Shares

மழை காலத்தில் முடியை பராமரிக்க

பொதுவாக கூந்தலை விரும்பாத பெண்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். சில பெண்களுக்கு நீளமான முடி பிடிக்கும், சில பெண்களுக்கு நீளம் குறைவாக இருக்கும் முடி பிடிக்கும். இப்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்கள் முடியை அழகுநிலையங்களில் வித விதமாக வெட்டி கொள்கிறார்கள். சிலருக்கு நேரான முடி வேண்டும் என்கிறார்கள், சிலர் சுருள் முடி வேண்டும் என்கிறார்கள். u கட், v கட் மற்றும் பல வடிவங்களில் வெட்டி கொள்கிறார்கள்.

கோடைகாலத்தில் உங்கள் முடி வறண்டு பாதிக்கப்படுகிறது என்றால், மழைக்காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும். மேலும் ஈரப்பதத்துடன் தலையில் இருக்கும் எண்ணெய் பசையால், முடியிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரித்து வரவேண்டும். இங்கு மழைக்காலத்தில் எப்படி முடியை பராமரிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

மழை காலத்தில் மயிர்கால்கள் சுத்தமாக இல்லை என்றால் அதிகபடியாக ஈரப்பசையால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வாரத்திற்கு இரண்டு மூன்று முறை ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் அழுக்கு சேர்வதை தவிர்க்கலாம்.

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, மழை காலத்தில் உங்கள் முடியின் எண்ணெய் பசையை குறைப்பதாக இருக்க வேண்டும். இல்லை எனில், இவை இன்னும் முடியின் எண்ணெய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்க செய்யும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண்டவர்கள், மைல்டு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.

அதிலும் ஷாம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், வெந்தயம், சீகைக்காய், செம்பருத்தி பூ மற்றும் இலை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது. இது இயற்கையை உங்கள் முடியின் எண்ணெய் பசையை அகற்றும்.

மேலும் கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

முடிந்த வரை இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சீட் வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.

தலைக்கு குளிக்க முடிந்த வரை வெந்நீரை தவிர்த்திடுங்கள். உங்கள் முடிகளை மட்டுமாவது குளிந்த நீரால் அலசுங்கள். இது உங்கள் முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது. மேலும் நீங்கள் குளித்து முடித்த உடன், தலை முடியை நன்கு உலர்த்துவது அவசியம்.

மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனிங், ஹேர் கலரிங் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon