Link copied!
Sign in / Sign up
1
Shares

மலச்சிக்கலை தவிர்க்க உதவும் 5 உணவுகள்..!

கர்ப்பகாலத்தில், கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளுள் மிகவும் பாடுபடுத்தும் பிரச்சனை மலச்சிக்கல். மலச்சிக்கல் ஏற்படுவதால், பெண்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய இயலாது, உண்ண முடியாமல், வலியுடன் கூடிய அவஸ்தையுடன் பாடுபடுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்சனையில் இருந்து, விடுதலை அளிக்க உதவவே, இப்பதிப்பு.. படித்து விடுதலை பெறுங்கள் தோழிகளே..!

கர்ப்பிணிகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகள் பற்றி பதிப்பில் காணலாம். சராசரியாக 25-30 கிராம் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை கர்ப்பிணிகள் உட்கொண்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

1. தயிர்

தயிரில் அதிக ஆரோக்கியம் அளிக்கும் பாக்டிரியாக்கள் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு குளிர்ச்சியளித்து, மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.

2. பருப்பு வகைகள்..

காய்ந்த பீன்ஸ் வகைகளான, pinto beans, navy beans, black beans, kidney beans, cannellini beans மற்றும் இதர பருப்பு வகைகளை உணவில் ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பருப்பு வகைகள் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால், இவை மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.

3. ஆப்பிள்..

ஆப்பிளை தினம் உண்பது மருத்துவரை விலக்கிவைக்கும் என்பர்; மருத்துவரை மட்டுமல்ல, மலச்சிக்கலையும் விலக்கி வைக்க உதவும் ஆப்பிள். ஒரு ஆப்பிளில் 4.4 கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. தினம் ஒரு ஆப்பிளை உண்டு, நோயில்லாது வாழ்வீராக..

4. கடலைகள்..

கடலை வகைகளான, Pistas, peanuts, almonds, walnuts இவை அதிக நார்ச்சத்து கொண்டவை. இவற்றில் அதிக போஷாக்கு உள்ளது. இவற்றை தினம் உண்டால், அதிக சக்தியும், நார்ச்சத்தும் பெறலாம்.

5. திராட்சை..!

திராட்சைகள் அதிக திரவத்தன்மை மற்றும் நார்ச்சத்து கொண்டவை. இவை செரிமானத்தை இலகுவாக்கும்; மேலும் குளிர்ச்சியை தரும். இவை கர்ப்பிணிகளின் மலச்சிக்கலை தடுக்க ஏற்ற உணவாகும்..!

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon