Link copied!
Sign in / Sign up
1
Shares

மகப்பேறு மருத்துவமனை தேர்வு: நினைவுகூற வேண்டிய 5 விஷயங்கள்..!

 

பெண்கள் கர்ப்பமடைந்த தருணம் முதல் குழந்தையை கையில் ஏந்தி, அதனோடு வாழப்போகும் எதிர்கால நாட்கள் வரை கண்ட கனவுகள் அனைத்தும் நினைத்தது நினைத்தபடி, பாதுகாப்பான முறையில் நனவாக, முதலில் அப்பெண் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும். அப்படி நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்க, மிக முக்கியமான விஷயம் சரியான மருத்துவர், சரியான மருத்துவமனை; இவ்வகையில் நல்ல மருத்துவர் கொண்ட நல்ல மகப்பேறு மருத்துவமனையை கண்டறிவது எப்படி? மகப்பேறு மருத்துவமனையை தேர்ந்தெடுக்கையில் என்னென்ன விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. குருத்தணு வங்கி..!

குழந்தை பிறந்த பின் வெட்டி எடுக்கப்படும் தொப்புள் கொடியை நீங்கள் பிரசவம் பார்க்க செல்லும் மருத்துவமனையால் பாதுகாக்க முடியுமா? என்று பரிசோதிக்க வேண்டும்; ஏனெனில் இது உங்கள் குழந்தையின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அப்படி இல்லையேல், குழந்தையின் குருத்தணுக்களை சேமிக்கும் வங்கியின் உதவி பெற்று சரியாக பிரசவித்த உடன், உரிய வங்கியாளர்களிடம் குழந்தையின் குருத்தணுக்களை சேமித்து வைக்க நீங்களோ அல்லது மருத்துவமனையோ தகுந்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும்..!

2. ஊழியர்கள்..!

நீங்கள் குழந்தையை பெற்றெடுக்க போகும் மருத்துவமனையில் தரமான & அன்பான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றவர்கள் குறித்து ஆராய்ந்து அறிந்திருத்தல் அவசியம்; ஏனெனில் பல சமயங்களில் மற்ற மனிதர்களின் அலட்சியத்தாலே, பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.

3. பயனாளர்கள்..

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரசவித்த மற்ற பெண்கள் மற்றும் மருத்துவமனையின் பயனாளர்களிடம் விவரம் கேட்டு அறிந்து பின்னர் மருத்துவமனையை தேர்வு செய்தல் மிக அவசியம். இந்த விஷயத்தில் அனுபவசாலிகள் சரியான வழிகாட்டுதலை உங்களுக்கு அளிக்க இயலும்..!

4. அருகாமை..

எல்லா பண்புகளும் கொண்ட மருத்துவமனை உங்கள் இல்லத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தால், அது பிரசவ சமயத்தில் பெரிய சங்கடமாகிவிடும்..! அப்படிப்பட்ட மருத்துவமனையை நீங்கள் தேர்வு செய்திருந்தால், முன்னரே அங்கு சென்று தங்கியிருந்து சிகிச்சை பெறல் வேண்டும்; இல்லையேல் நல்லதான, அருகில் உள்ள மருத்துவமனையை நீங்கள் தேர்வு செய்தல் அவசியம்..!

5. தகவல்..

மருத்துவமனை தனது மற்றும் மருத்துவர்களின் அனைத்து தகவல்களையும் உங்களுடன் தெளிவாக பகிர்ந்திருக்க வேண்டும்; யார் உங்களுக்கு பிரசவம் பார்க்கபோகிறவர், அவரின் படிப்பென்ன, அனுபவமென்ன, செலவு எவ்வளவு ஆகும்.. நீங்கள் அளிக்கும் பணம் அவர்கள் அளிக்கும் வசதிக்கு சரிதானா என்பன போன்ற தகவல்களை நீங்கள் மருத்துவமனையிடமிருந்து கேட்டு பெற்றிருக்க வேண்டும்..!

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon