Link copied!
Sign in / Sign up
128
Shares

மகனுக்கு தந்தை கற்றுத்தர வேண்டிய 5 பாடங்கள்

தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாகும். மகன்கள் பெரியவர்களாகும் போது தந்தை சிறிது இடைவெளியை கடைபிடிப்பார். ஆனால், அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளது. இது மீன் பிடிப்பது போன்றோ அல்லது விளையாட்டு சம்பந்தமான பாடங்கள் அல்ல. அதைவிட முக்கியமான வாழ்க்கை பாடங்களாகும். சில சமயம் அப்பாக்களுக்கே பிள்ளகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டுமென்று தெரிவதில்லை அதனால்தான் இந்த கட்டுரையில் அப்பாக்கள் மகன்களுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்களை பட்டியலிட்டுள்ளோம்.   

1 பெண்களை மதித்தல்

மகனுக்கு சொல்லித்தர வேண்டிய மிக முக்கியமான பாடம் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதாகும். பிள்ளைகள் பெற்றோரின் செயல்களில் இருந்தே கற்றுக்கொள்வார்கள். எனவே, தந்தை எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.

2 பொறுப்பெடுத்து கொள்ளுதல்

நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு காரியத்திற்கோ அல்லது பிற செயல்களுக்கோ பொறுப்பை எடுக்க வேண்டும். எனவே, பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். தாய்மார்கள் பெரும்பாலும் அதிக உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பதால், தந்தைதான் இவற்றை கற்றுத்தர வேண்டும்.

3 கடினமாய் உழைத்தல்

இது அம்மா மற்றும் அப்பா இருவரும் கற்றுத்தர வேண்டிய பண்பாகும். அப்பா கடுமையான பக்கத்தையும் வாழ்க்கையில் தேவையான தொடர்ச்சியான கடின உழைப்பையும் பற்றி கற்றுக்கொடுக்கும்போது, அம்மா கடினமான வேலையின் மென்மையான பக்கத்தையும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டுமெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

4 வெற்றி, தோல்வி

தோல்வி பயத்தில் குழந்தைகள் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சில சமயம் ஏமாற்ற கூட முயற்சிப்பார்கள். ஆனால், வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டியது அப்பாவின் கடமையாகும். அதை தொடர்ந்து தான் குழந்தைகள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.

5 ராஜாவை போல வாழுதல்

பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள கவலைகள் நம்முடைய மகிழ்ச்சியை சிதைப்பதோடு நாம் கொண்டுள்ள வாழ்க்கையையும் மறக்க செய்யும். எனவே அப்பா கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தும் காட்டவேண்டும்.

அப்பாக்கள் என்பவர்கள் உலகிலுள்ளவர்களின் மிக சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்ததை வழங்கவும், சிறந்ததைச் செய்யவும் அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். இது ஒரு எளிதான பணி அல்ல, அவர்களுக்கு நாங்கள் சொல்லும் ஒரே விஷயம் நன்றி.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon