Link copied!
Sign in / Sign up
5
Shares

மாத்திரைகள் இல்லாமல் மாதவிலக்கை தள்ளிப்போட 5 வழிகள்

மாதவிலக்கு என்பது பெண்களுக்கு ஏற்பட கூடிய இயற்கையான நிகழ்வு. இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மனக்குழப்பம், திடீரென மனநிலை மாற்றம், வயிற்று வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். மாதவிடாய் காலத்தில் அவர்களது அவசிய தேவை ஓய்வு.

பெண்களுக்கு பொதுவாகவே பண்டிகைகள், விசேஷங்கள் என்றால் மிகவும் பிரியம். அதிலும் திருவிழா போன்றவற்றில் பங்கேற்பதை பெரிதும் விரும்புவார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு பிரச்சனையாய் அமைவது மாதவிலக்கு.

எப்போதும் நாட்கள் தள்ளி வரும் மாதவிலக்கு பண்டிகை களங்களில் சரியாக வந்துவிடும். இதை தவிர்க்க தற்போதைய பெண்கள் மாத்திரைகள் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மாத்திரைகள் என்றாலே அதில் பக்க விளைவுகளும் சேர்ந்தே இருக்கும் என்பது நாம் அறிந்ததே, இங்கு நாம் மாத்திரைகள் இல்லாமல் மாதவிலக்கை தள்ளிப்போடும் வழிகளை அறியலாம்.

1 பொட்டுக்கடலை

இது நம் வீட்டு சமையல் அறைகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று மற்றும் பண்டைக்காலம் முதல் நாம் இதை பயன்படுத்தி வருகிறோம்.

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1 கப்

வெதுவெதுப்பான தண்ணீர் - 3 கப்

செய்முறை

1 பொட்டுக்கடலையை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

2 பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் மற்றும் பொட்டுக்கடலை பொடி சேர்த்து மிதமான சூட்டில் மென்மையாகும் வரை வேகவிடவும்.

3 இதை உங்கள் மாதவிலக்கு தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்து தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிட கூடாது.

2 சப்ஜா விதை

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒன்று. மாதவிலக்கை தள்ளி போடுவதில் இதன் பங்கு அதிகம்.

தேவையான பொருட்கள்

சப்ஜா விதை - 1 தேக்கரண்டி

தயிர் - ¼ கப்

மலை வாழைப்பழம் - 2

தண்ணீர் - 1 கப்

செய்முறை

1 சப்ஜா விதையை தயிரில் ஊற வைக்கவும்.

2 நன்கு தயிரில் ஊறியதும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மலை வாழைப்பழங்களையும் சாப்பிட்டு, பின் தண்ணீர் குடிக்க வேண்டும்.

3 இதை காலையில் சாப்பிட்டால், அன்று முழுவதும் கண்டிப்பாக மாதவிலக்கு ஏற்படாது.

3 ஆப்பிள் சிடர் வினிகர்

இது இயற்கையான வழியில் சில நாட்களுக்கு மாதவிலக்கை தள்ளி வைக்கும் சிறந்த வழியாகும். இது மாதவிலக்கை தாமதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதற்கான அறிகுறிகளையும் தாமதப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் சிடர் வினிகர் - 3 தேக்கரண்டி

தண்ணீர் - 1 கப்

செயல்முறை

1 ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

2 உங்கள் மாதவிலக்கு தேதிக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை இதை குடிக்க வேண்டும்.

4 எலுமிச்சை

எலுமிச்சை சிட்ரிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது ஒரு சில நாட்களுக்கு உங்கள் மாதவிலக்கு தள்ளி போக உதவுகிறது. மேலும், இது மாதவிடாய் அறிகுறிகளும் முதுகு வலி, வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளை சரி செய்கிறது.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை - 3

தண்ணீர் - 100 மிலி

சர்க்கரை - விருப்பத்திற்கேற்ப

செயல்முறை

1 மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து, தண்ணீருடன் சேர்க்கவும்.

2 சுவைக்கு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

3 இதை மாதவிலக்கு ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பிருந்து, தினம் 3 முறை குடிக்க வேண்டும்.

5 பீன்ஸ்

பீன்ஸ் மாதவிலக்கை தள்ளிப்போடும் மற்றொரு சிறந்த வழியாகும். மாதவிடாய் காலத்தில் பீன்ஸ் சாப்பிடும் பெண்களின் இரத்தப்போக்கு குறைவதாக சொல்கின்றன ஆய்வு முடிவுகள்.

தேவையான பொருட்கள்

பீன்ஸ் - 1 கப்

தண்ணீர் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செயல்முறை

1 பீன்ஸை தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடம் நேரம் வேக வைக்கவும்.

2 பின் அந்த தண்ணீரை வடித்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

இவற்றை பின்பற்றி இயற்கையான வழிகளில் மாதவிலக்கை விலக்கி வையுங்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon