Link copied!
Sign in / Sign up
6
Shares

மாதவிலக்கின் போது வயிற்று வலியா?

மாதவிலக்கு என்பது மாதாமாதம் பெண்களுக்கு ஏற்படும் சாதாரண நிகழ்வு தான். அது பெண்கள் பூப்படைவதில் தொடங்கி முதிர்ச்சியடைந்து நிற்கும் வரை பெண்களுக்கு தொடர்ந்து ஏற்படுகிறது. இதனால் சில பெண்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால், சில பெண்கள் இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதில் ஒன்று தான் மாதவிடாய் கால வயிற்று வலி.

சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலியால் எந்த வேலையும் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள். இது திருமணத்தின் பின் தானாக சரியாகிவிடும். நாம் ஏதும் செய்யமுடியாது என்பதே பெரியவர்களின் கருத்தாக இருக்கிறது. மாதம் மாதம் மருத்துவமனைக்கு செல்வதும் சிரமான ஒன்று தான். இங்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கான சிறந்த 5 வழிகளை பார்க்கலாம்.

1 பப்பாளி

பப்பாளியின் மருத்துவ பண்புகள் நாம் அறிந்ததே. பப்பாளியை கருத்தரித்திருக்கும் போது சாப்பிட கூடாது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனால், மாதவிடாய் காலத்தில் எப்படி சாப்பிட்டால் வலி குறையும் என்பதை பற்றி யாருக்கும் தெரிவதில்லை.

பப்பாளியில் அலர்ஜிக்கு எதிராக செயல்படக் கூடிய இரும்பு, கரோட்டின், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் இவை தசை சுருக்கங்களை விடுகின்றன.

தேவையான பொருள்

பப்பாளி - 1

சாப்பிட வேண்டிய முறை

1 நன்கு பழுத்த பப்பாளியை மாதவிடாய் காலத்திற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

2 இதை மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்று வலி குறையும்.

2 துளசி

துளசி ஒரு புனிதமான இலையாக கருதப்படுகிறது. இது அதிக மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இது மாதவிடாய் வலிக்கான சிறந்த தீர்வாக இருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் வலி நிவாரணி பண்பு பக்கவிளைவுகள் இல்லாமல் வலியை நீக்குகிறது.

தேவையான பொருட்கள்

துளசி இலைகள் - சிறிதளவு

தண்ணீர் - 1 கப்

செய்முறை

1 சிறிதளவு துளசி இலைகளை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.

2 அவற்றை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். துளசி இலையின் மருத்துவ பண்புகள் தண்ணீரில் சேரும் வரை கொதிக்க வேண்டும்.

3 பின் அதை மூடி வைத்து ஆற விட வேண்டும்.

4 இதை ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தொடர்ந்து குடித்தால் வயிற்று பிடிப்புகளை சரி செய்யும்.

3 இஞ்சி

இஞ்சி மருத்துவ தன்மை கொண்ட உணவுப் பொருள். இது செரிமானத்தை தூண்டக் கூடிய ஒன்று என்பது நாம் அறிந்ததே. இதன் மருத்துவ தன்மை வயிற்று வலியை குறைக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறிதளவு

எலுமிச்சை பழம் - 1

தண்ணீர் - 1 கப்

செய்முறை

1 ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு இஞ்சியை துருவி சேர்க்கவும்.

2 அதை 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

3 பின் வடித்து, அதனுடன் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

4 இதனுடன் தேன் சேர்த்து, உங்கள் மாதவிடாய் காலத்தில் 2 முதல் 3 முறை ஒவ்வொரு கப் குடிக்க வேண்டும்.

4 கேரட் ஜூஸ்

சில நேரத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி காரணமாகவும் வயிற்று வலி ஏற்படும். உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக ஏற்பட செய்ய கேரட்டில் உள்ள கரோட்டின் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருள்

கேரட் - ஒன்று அல்லது இரண்டு

செய்முறை

1 உங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்பிருந்து தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர வேண்டும்.

2 மாதவிடாய் காலத்தில் தினமும் கேரட் ஜூஸ் ஒன்று அல்லது இரு முறை குடிப்பது நல்ல பலன் தரும்.

5 இலவங்கப்பட்டை

இது உங்கள் சமையலறையில் இருக்கும் வாசனை பொருட்களில் ஒன்று. மேலும், இது நிறைய மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது. இது மாதவிடாய் கால வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்

இலவங்கப்பட்டை பொடி - ¼ தேக்கரண்டி

வெந்நீர் - 1 கப்

தேன் - தேவையான அளவு

செய்முறை

1 இலவங்கப்பட்டை பொடியை வெந்நீரில் சேர்க்கவும்.

2 அதன் மருத்துவ பண்புகள் தண்ணீரில் நன்கு சேரும் வரை வைத்திருக்கவும்.

3 பின் அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.

4 இதை மாதவிடாய் துவங்குவதற்கு 2 முதல் 3 நாட்களுக்கு முன்பிருந்து செய்தால், மாதவிடாய் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon