Link copied!
Sign in / Sign up
0
Shares

மாதவிடாயின் போது மல்லுக்கட்டக்கூடாத சில விஷயங்கள்...

மாதம் பிறந்தால் எது எட்டி பார்க்கிறதோ, இல்லையோ? மாதவிடாய் என்பது மகளிரை மட்டும் எட்டிப்பார்த்து செல்வது வழக்கம். எனினும், இன்றும் இந்த மாதவிடாயை உடல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வாக மட்டுமே பார்த்து விலக்கு அளிக்க காத்திருக்கும் இடங்கள் பல. இந்த மாதவிடாயை உணர்வு பூர்வமாக பார்த்தால் மட்டுமே பெண் என்பவள் அனுபவிக்கும் வலி என்பது மற்றவருக்கு என்ன என புரியும். வீட்டில் இருக்கும் பெண்களாலும், இந்த மாதவிடாயின் போது மன கஷ்டத்தை சில சமயத்தில் சந்திக்க நேரிட, பணிக்கு செல்லும் பெண்களின் அவலநிலையை எடுத்துரைக்க வார்த்தை தான் உண்டா என்ன? இவ்வுலகில்.

மாதவிடாயின் போது நீங்கள் ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

அழுத்தம் தரக்கூடிய திரைப்படம்:

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும் முன்பே உணர்வுகள் வெளிவர தொடங்குகிறது. இதனால், இரத்த போக்கின் போது அதை கையாள முடியாமல் சிரமமும் கொள்ளக்கூடும். இந்த பிரச்சனையை தவிர்க்க அழுத்தம் தரக்கூடிய உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை பார்ப்பதை தவிர்த்திட வேண்டியது அவசியமாகும். அதனால், மகிழ்ச்சியை தரும் திரைப்படங்களையோ அல்லது டிவி பார்ப்பதை தவிர்ப்பதோ மாதவிடாயின் போது மிக நல்லது என்கிறது ஆய்வு.

மாதவிடாயை மறந்திடுங்கள்:

மாதவிடாய் வருவது முன்கூட்டியே அறிவீர்களாயின் அதற்கு ஏற்ப உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும். நாப்கினை முன்பே வாங்கி வைத்துக்கொள்வது, தேவையான சத்தான உணவை வாங்கி வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களை திட்டமிட்டு செய்வதனால் மாதவிடாய் பற்றிய நினைப்பு பெரிதும் தவிர்க்கப்படுகிறது. அத்துடன், ஓய்வில் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவான சிறந்த புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வதாலும் மாதவிடாயை மறந்து மன நிம்மதியுடன் உங்களால் இருக்க முடியும். மாதந்தோரும் இதை நாம் பழக்கப்படுத்தி கொள்ள, இதனால் மாதவிடாய் என்பதை மறந்து செயலாற்ற முடிகிறது.

வெள்ளை பேண்ட் அணியுங்கள்:

மாதவிடாயின் போது வெள்ளை நிறம் என்பதை உங்கள் ஆடை விஷயத்தில் தேர்வு செய்ய கொஞ்சம் சங்கடம் உண்டாகலாம். இதனால், கறையை மறைக்க நல்ல கரு நிற கலர்களை தேர்ந்தெடுப்பதுண்டு. ஆனால், மாதவிடாயின் போது வெள்ளை நிறமே உடுத்த பரிந்துரை செய்யப்படுகிறது. வெளியில் செல்லும்போது வெள்ளை நிற ஆடை அணிய தயங்கினாலும், வீட்டில் இருக்கும்போது முடிந்தளவுக்கு வெள்ளை நிற ஆடை அணிவது மிக நல்லது. மற்றவர்களை பற்றிய கவலையால் உங்களுக்கு எது தேவையோ அதை உதறி தள்ளாதீர்கள்.

உடற் பயிற்சி செய்யலாம்:

மாதவிடாயின் போது உடற் பயிற்சி செய்யலாமா? எனும் கேள்வி பலர் மனதில் எழுகிறது. இந்த கேள்விக்கு ஆம் என்னும் பதிலே வெளிவருகிறது. அட ஆமாங்க, மாதவிடாய் என சொல்லி வீட்டில் டிவி பார்ப்பது, தின்பண்டங்களை சாப்பிடுவது சிறந்த யோசனை இல்லையாம். அதற்கு பதிலாக வழக்கம் போல் உடற்பயிற்சி செய்ய, இதனால் தசைப்பிடிப்பிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, உடலில் ஏற்படும் வலிக்கும் தீர்வாக இது அமைகிறது.

பால் சேர்ப்பது:

மாதவிடாயின் போது கால்சியம் நிறைந்த பாலை பருகலாம். ஆனால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ், தயிர் போன்றவற்றில் இருக்கும் அரக்கடோனிக் அமிலம் மாதவிடாய் காலத்தில் சிரமத்தை தரக்கூடியது. மேலும், கால்சியம் அடங்கிய பழங்களையும் மாதவிடாய் காலத்தில் நீங்கள் சாப்பிடலாம்.

ஒரே பாதுகாப்பு அட்டையை பயன்படுத்த கூடாது:

நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் மாதவிடாயின் போது பயன்படுத்தும் நாப்கினை மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, அதிகம் இரத்தம் வழியும்போது கண்டிப்பாக மாற்ற மறந்து விடாதீர்கள். அதான் ஒரு முறை மாற்றிவிட்டோமே எனும் எண்ணத்தை மனதில் வளர விடாதீர்கள். இதனால், பாக்டீரியாவானது அதிகரிக்க, உங்கள் உடலில் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

கரடிகள் வாழும் நாடு:

நீங்கள் கரடிகள் வாழும் இடத்தில் மாதவிடாயின் போது செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், மனிதர்களை விட கரடிகளையும் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த வாடை ஈர்க்கிறது. இதனால், நீங்கள் வசிக்கும் பகுதியில் கரடிகள் இல்லாதிருத்தல் அவசியம். அதனால், முடிந்த அளவுக்கு மாதவிடாயின் போது வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள். போலார் கரடி தான் நீங்கள் பயன்படுத்தும் நாப்கின் வாசனை பிடித்து வரக்கூடியதாம்.

உப்பு தின்பண்டங்களை தவிர்க்க:

மாதவிடாயின் போது உப்பு சேர்ந்த தின்பண்டத்தை சேர்ப்பதால் உங்கள் வயிறு உப்ப வாய்ப்பிருக்கிறது. அதனால், மாதவிடாயின் போது நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதனால் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உங்களுக்கு கிடைக்கிறது.

கலோரிகளை கணக்கிடல்:

இந்த மாதவிடாய் காலத்தில் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. ஆனால், முழு சாக்லேட்டை ஒரே நேரத்தில் மொத்தமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டியது அவசியமாகும். அத்துடன் நாக்கின் சுவை போக்குக்கு வாங்கி சாப்பிடாமல், நல்ல ஆரோக்கியமான உணவை வாங்கி சாப்பிட வேண்டும். ப்ரெஷ்ஷான பழங்கள் உங்கள் உடலுக்கு மிக நல்லது. நீங்கள் ஷாப்பிங்க் செல்லும்போது உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த ஆர்கானிக் உணவை வாங்குவதில் கவனம் செலுத்தல் வேண்டும். 

மாதவிடாயின் போது மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமல் உங்கள் மனம் சொல்வதை கவனமாக கேளுங்கள். அறிவுரைகளை பெற்று அதற்கேற்ப இந்த நாளுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ள, இதனால் நாளடைவில் மாதவிடாய் என்பது மாதந்தோரும் வந்து செல்ல, அதை இனிமையாக வரவேற்று... வழியனுப்பவும் உங்கள் மனமானது பழகிக்கொள்ளக்கூடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon