Link copied!
Sign in / Sign up
0
Shares

மாதவிடாய் சுகாதார நாள் எப்போது என தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில், ஈசியாக காசு வாங்காமல் நமக்கு கிடைப்பது அட்வைஸ் மட்டும் தான். அப்படி இருக்க, ஒரு சில விஷயத்தை காசு கொடுத்தால் கூட ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விடும் உலகமிது. என்ன செய்வது? வாரத்துக்கு ஒரு விழிப்புணர்வு என கொடுக்கப்பட்டாலும், அதற்கும் பிரபலம் வர நினைக்கும் மனநிலையில் மக்கள் இருப்பது யார் செய்த தவறு? ஒரு பிரச்சனையை பற்றி பேசும்போதே...அது மறக்கும் அளவுக்கு இன்னொரு பிரச்சனை உருவாக தீர்வென்பது கிடைக்காமலே நாம் வாழ பழகிவிட்டோம் போலும். 

இதன் விளைவு தான்... விழிப்புணர்வு பற்றிய செய்தியை கூட செய்தித்தாளில் படிக்காமல் தவிர்த்து நகர்கிறோம்.

இன்று நாம் பார்க்க போவது, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு எனும் நாளை பற்றி தான். 

மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நாள்:

மே 28 ஆம் நாள் மாதவிடாய் விழிப்புணர்வு நாளாக வருடந்தோரும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாதவிடாயின் போது எப்படி பெண்கள் சுகாதாரமாக இருப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வில் எதை பற்றியெல்லாம் பேசப்படுகிறது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தின் குறிக்கோள்:

1. மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கும் சிரம நிலைகளை விவாதிப்பது.

2. அந்த சிரமத்தை அவர்கள் கடந்து நேர்மறை எண்ணத்தை மனதில் எப்படி விதைப்பது?

3. பெண்களுக்கான ஆதரவு குழுக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? (குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைக்கு குரல் கொடுக்க)

4. மாதவிடாய் விழிப்புணர்வை மற்றவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது?

5. சமூகத்தில் இதற்கான விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது?

 

இத்தகைய விவாதமெல்லாம் இந்த நாளில் மற்றவர்கள் மனதில் விதைக்கப்பட, இதனால்... மகளிர் கொள்ளும் மாதவிடாயின் சிரமங்கள் மற்றவர்களுக்கும் தெரியவருகிறது.

இந்த மாதவிடாய் விழிப்புணர்வு நாள் என்பது 28ஆம் தேதி மே மாதம், 2014 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

விளைந்த நன்மைகள்:

1. 2017ஆம் ஆண்டு, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வில் மக்கள் அதிகமாக கவனம் செலுத்திய ஆண்டாக அமைந்திருக்கிறது.

2. இதுவரை ஒட்டுமொத்தமாக 54 நாடுகள் தங்களுடைய ஒத்துழைப்பை தர, இதனால் 350 நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது.

3. இந்த நிகழ்வுகளும்... பல பள்ளிகள், சமூக பேரணிகள், விழிப்புணர்வு மேடைகள் என பல பொது இடங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமை மிக்க விஷயம்.

இந்த மாதவிடாய் பற்றி அறியாதவர்கள் தான் அதிகம் என்றால், அதற்கான முயற்சியின் மூலமாக இந்த நாளை பற்றிய விழிப்புணர்வை நாமும் நாலு பேருக்கு ஏற்படுத்தலாம். 

மாதவிடாய் என்பது பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. அவளுக்கு உடல் அளவில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளை விட, மனதளவில் ஏற்படக்கூடிய தொந்தரவு என்பது தான் இந்நாளில் அதிகம். அந்த தொந்தரவை போக்க, சரியான உணவு முறையும்... தவிர்க்க வேண்டிய ஒரு சில விஷயங்களும் மிகவும் முக்கியமான ஒன்று.

ஆனால், மாதவிடாய் என்பதை விலக்காய் மட்டுமே பார்க்க தொடங்கியதால் உடல் வலியுடன் சேர்த்து... மன வலியையும் ஒரு பெண் அனுபவிக்கிறாள் என்பதே உண்மை. எனவே, மற்ற நாட்களை காட்டிலும் இந்த மே மாதம் 28ஆம் தேதி, நீங்களும் இது போல் விழிப்புணர்வில் கலந்துக்கொண்டு பெண்கள் படும் கடினத்தையும், அதை கடப்பதற்கான வழியையும் பகிர்ந்துக்கொள்ள... மாதவிடாய் என்பது மாதந்தோறும் வந்தாலும், மற்றவர்களும் எது தேவை என்பதை புரிந்து வாழ்வில் முன் நோக்கி செல்வர்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon