Link copied!
Sign in / Sign up
14
Shares

மாதவிடாய் கப் - அறிமுகம்..!

பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களுக்காக பல நூறு ரூபாய்களை செலவு செய்கின்றனர். நாப்கின்கள் இன்றைய தலைமுறை பெண்களுக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் உள்ளது. இது போன்ற நாப்கின்களை பயன்படுத்தும் போது குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறைகளாவது இதனை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய நவீன யுக பெண்கள் தற்போது மென்சுரல் கப்களை (menstrual cup) பயன்படுத்தி வருகின்றனர். இது நாப்கின்களை விட சுகாதாரமானதாகும். பயன்படுத்த எளிதானதாகும் இருக்கிறது என்று இதனை உபயோகப்படுத்தும் பெண்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் மீதான முதலீடும் மிகமிகக் குறைவு தான்.

பரிந்துரை

மாதவிடாய் காலத்தில் இந்த மாதவிடாய் கப்களை பயன்படுத்துவதன் மூலமாக, நாப்கிங்கள் மூலமாக உண்டாகும் தொற்றுக்களை தவிர்க்கலாம். இதனை பெண்களின் உதிரப்போக்கிற்கு தகுந்தாற் போல் ஒரு நாளில், ஒரு சில முறைகள் சுத்தம் செய்து பயன்படுத்தலாம். பெண்கள் நல மருத்துவர்கள் நாப்கின்கள், துணி, டம்போன்ஸ் போன்றவற்றை விட இந்த மாதவிடாய் கால கப்கள் சிறந்தது என்று தெரிவிக்கின்றனர்.

பயன்படுத்தும் முறை

மாதவிடாய் கப்பினை முதலில் ஒரு C வடிவம் வருமாறு மடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை பெண்ணுறுப்பில் செருகிவிட வேண்டும். இதன் மடிப்பு உள்ளே சென்ற பிறகு தானாகவே விரிந்து பழைய நிலைக்கு வந்துவிடும். இது பெண்ணுறுப்பின் உட்புற சுவரை தொட்டு மூடும் படியாக இருக்கும். இதனை உள்ளே வைத்த உடன் ஒரு முறை திருப்பி விட்டுக் கொள்ளவும். இதனால் ஒருவேளை அந்த கப் விரிவடையாமல் இருந்தால் விரிவடைந்து கொள்ளும்.

சிறந்தது 

மாதவிடாய் கப்கள் மிகச்சிறந்த ஒன்றாகும். இதனை மீண்டும் மீண்டும் பல முறைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அடிக்கடி நாப்கின்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. நாப்கின்களை நாம் பயன்படுத்தி விட்டு வெளியே எறிய வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுப்புறம் மாசடைகிறது.

அளவு 

இந்த மாதவிடாய் கப்களை வாங்கி பயன்படுத்துவதற்கு முன்னால் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்ணுறுப்பின் அளவான ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும் பெண்கள் சிறிய சைஸ் கப்களை வாங்க வேண்டியது அவசியம். இது சுகாதார ரீதியாகவும், பண ரீதியாகவும் பெண்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கிறது.

முக்கியத்துவம் 

வேலைக்கு செல்லும் பெண்கள், வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் போன்றவர்களுக்கு அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற இடங்கள் இல்லாமல் போகலாம். இவ்வாறு மாற்றாமல் இருந்தால், பெண் உறுப்பில் தொற்றுகள் உண்டாகும். அதே போல் உதிரப்போக்கு கரையானது ஆடைகளில் ஆகிவிட்டாதா என்பது போன்ற பய உணர்வும் இருக்கும். இந்த மாதவிடாய் கப்களில் இது போன்ற ஒரு பிரச்சனைகள் இருக்காது.

பாதுகாப்பு 

இந்த கப்களை பயன்படுத்துபவர்கள் ஒரு விஷயத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கப்களை மற்றவர்களுடன் பகிர்ந்து உபயோகப்படுத்த கூடாது. இதனை ஒருவர் மற்றுமே உபயோகப்படுத்த வேண்டும். இந்த கப்பை சூடான நீரில் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

குறிப்பு 

இதனை பயன்படுத்தும் முறை குறித்தும், இதனை நீங்கள் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்தும் உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon