Link copied!
Sign in / Sign up
0
Shares

மாதவிடாயின் போது இதெல்லாம் வேண்டாமே!

மகளிரின் வாழ்வின் மிகவும் முக்கியமான ஒன்று இந்த மாதவிடாய் எனும் மாதவிலக்கு. மாதம் விலக்கினால் பரவாயில்லை... மனிதர்கள் அல்லவா மூன்று நாட்கள் விலக்குகின்றனர். விலக்குபவர்கள் பற்றிய கவலை ஒருபோதும் வேண்டாம் பெண்களே. நீங்கள் மாதவிடாயின் போது தான் மிகவும் வலிமையான மனதுடன் இருத்தல் அவசியமாகிறது. அத்துடன் ஒரு சில உணவையும் தவிர்த்திடுங்கள். இல்லையேல், அது உங்களுக்கு எதிர்க்காலத்தில் பலவகை பிரச்சனைகளை தந்துவிடும் என்பதே உண்மை.

சரி, மாதவிடாயின் போது... என்னவெல்லாம் நீங்கள் சாப்பிடக்கூடாது.

ஆல்கஹால்:

ஆளில்லா நேரத்தில் ஏதேனும் சாப்பிட விரும்பினாலும், அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு சாப்பிடுவது தற்காப்பிற்கு கூட பயனளிக்கும். அதனால், ஆல்கஹால் கொண்ட எந்த ஒரு பொருளையும் இந்த நேரத்தில் தவிர்ப்பது மிக நல்லது. ஆல்கஹாலை சேர்த்து கொள்வதனால் ஆஸ்ட்ரோஜென் லெவல் அதிகரிக்கிறது. இதனால், உங்கள் மாதவிடாய் காலமானது மோசமான விளைவையும் ஏற்படுத்தக்கூடும்.

காபி கலந்த பானங்கள்:

உங்களுடைய மாதவிடாயின் போது காபி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். காபி சாப்பிடுவதனால், உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இதனால் இதய துடிப்பு சீரற்று இருக்க, மன உலைச்சலையும் சேர்த்து தந்திடும். 

அதனால், காபிக்கு பதிலாக க்ரீன் டீ, தக்காளி மற்றும் கேரட் ஜூஸ் போன்ற ஜூஸ் வகைகளை மட்டும் எடுத்துக்கொள்வது உங்கள் உடம்புக்கு தேவையான சத்தை தருகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு:

பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, ஊறுகாய்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட சூப், அப்பளம் ஆகியவற்றை தவிர்த்தல் நல்லது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஷாப்பிங்க் சென்டரில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருளை சாப்பிடாமல், வீட்டிலே செய்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது.

கொழுப்பு சாப்பிடுவதில் கவனம்:

மாதவிடாயின் போது கொழுப்பு சேர்த்துக்கொள்வதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும். நீங்கள் கொழுப்பை அளவுக்கதிகமாக சேர்த்துக்கொள்ள, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அத்துடன், இந்த நாட்களில் உங்கள் சருமமானது மிகவும் உணர்ச்சியுடன் இருப்பதால், கொழுப்பு சேர்த்து கொள்வதில் கவனம் என்பது உங்களுக்கு இருத்தல் வேண்டும். அதனால், கொழுப்பு மிகுந்த கறி, பர்கர், கிரீம் கொண்ட இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.

வறுத்த உணவு:

சிப்ஸ், ஸ்நாக்ஸ், பிஸ்கட் போன்றவற்றில் ஹைட்ரஜனேற்ற பண்பு கொண்ட காய்கறி எண்ணெய் இருக்கிறது. இதனாலும் உங்கள் ஆஸ்ட்ரோஜென் லெவல் அதிகரிக்கலாம். அதனால், மாதவிடாயின் போது வறுத்தவற்றை குறைத்துக்கொள்வது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட தானியம்:

பிரெட், பீட்சா, தானியங்கள், டார்ட்டில்லா ரொட்டிகளை இந்த நேரத்தில் நீங்கள் தவிர்த்திட வேண்டும். இல்லையேல், வயிறு வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உப்பு அதிகம் கொண்ட உணவு:

பதப்படுத்தப்பட்ட சூப், பன்றி இறைச்சி, சிப்ஸ் போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதால்...அவற்றை மாதவிடாயின் போது உண்ணாதீர்கள். மாதவிடாயினால் உண்டாகும் நீர், ஏற்கனவே தேங்கி இருக்க, இந்த தேவையற்ற உப்பினால் வாயு தொல்லை, வயிறு வீங்கியிருப்பது போன்ற உணர்வு என பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மாதவிடாய் என்பது தவிர்க்க முடியாத ஒரு சுழற்சி முறை என்றாலும், அதில் தவிர்க்க வேண்டிய ஒரு சில உணவால்... வரவிருக்கும் தேவையற்ற  பிரச்சனைகளை உங்கள் வாழ்வில் தவிர்த்து நலமுடன் வலம் வரலாமே...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon