Link copied!
Sign in / Sign up
3
Shares

மாதவிடாய் நாப்கினால் புற்றுநோய் ஏற்படுமா...?

மாதவிடாயின் போது, பெரும்பாலும் துணியினை உபயோகப்படுத்திய காலம் என ஒன்று இருந்தது. அதன் மூலம், பெண்களுக்குப் பற்பல சுகாதார குறைகள், பிரச்சனைகள் உண்டாகின. நாப்கின் பெண்களிடையே பரவலான பிறகு, ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின் வைப்பது? ஒரு நாப்கினை எவ்வளவு நேரம் வைத்திருப்பது? இரத்தப்போக்கு குறைவாக இருக்கும் தருணம் ஒரு நாள் முழுக்க ஒரு நாப்கின் போதுமா? சிந்தெடிக் நாப்கின் நல்லதா, காட்டன் நாப்கின் நல்லதா? சிந்தெடிக் நாப்கின் உபயோகித்தால், பிறப்புறுப்பில் புற்றுநோய் ஏற்படுமா?

இவ்வாறு ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள், இன்றைய பெண்களிடம் ஏற்பட்டுள்ளன. அனைத்திற்கும் பதில் கூறும் விதமாக இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம்..!

சிந்தெடிக் நாப்கின்

சிந்தெடிக் நாப்கின் சிலருக்கு ஒவ்வாமையையும், அரிப்பையும் ஏற்படுத்துவது உண்மையே. இது, தனி நபர் தொடர்பான விஷயம். அனைவருக்கும் இவ்வாறு நிகழும் என்பது நிச்சயமில்லை. நம்மில் பலர், ஒரு நாப்கின் முழுக்க முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதே இல்லை. இது பெரும் தவறான செயல் சகோதரிகளே. 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

 

எது சிறந்தது?

குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை உபயோகப்படுத்தலாம். அதற்கு முன்னரே நனைந்து அசௌகரியம் ஏற்பட்டு விட்டால், உடனே மாற்றுவது நல்லது. ஒருசில பெண்கள், ஈர அசௌகரியத்தைத் தவிர்க்க, சிந்தெடிக் லேயருடன் வருகிற நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஈர உணர்வே ஏற்படவில்லையே என இரவு வரை  ஒரே நாப்கினை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால், ஒவ்வாமை, அரிப்பு உண்டாகும்.

காட்டன், சிந்தெடிக் என எவ்வித வேறுபாடும் இல்லை. இவ்விரண்டில் எது சிறந்தது என பார்த்தால், காட்டன்தான்.

எது முக்கியம்..?

இன்றைய பெண்கள் இறுக்கமான காலடை அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் உபயோகப்படுத்துகிறார்கள். இதன் மூலம், ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது; நோய்தொற்றும் உண்டாகலாம். ஒரு நாப்கினை நீண்ட காலம் வைத்திருந்தால், சிலருக்கு சிறுநீரக நோய்த்தொற்றுகள் உண்டாகும்.

இச்சமயத்தில், 'அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளதே' எனத் தண்ணீர் பருகுவதைக் குறைப்பது நல்லதல்ல. நீரும் குடிக்காமல், நாப்கினையும் அதிக நேரம் மாற்றாமல் இருந்தால், அது ஆரோக்கியமல்ல. வேலைப்பளுவினால், பெரும்பாலான பெண்கள் இந்த தவறை செய்கிறார்கள். வேலையைவிட ஆரோக்கியம் முக்கியமல்லவா?

நோய்தொற்று..!

சிலரோ, மாதவிடாய் சமயத்தில், பிறப்புறுப்பில் வெப்பமாக உணர்வார்கள். இதை நோய்தொற்று என்று நினைத்துப் பயப்பட வேண்டாம். சிலருக்குப் பிறப்புறுப்பு ரணமாகி, குளிர்ந்த நீர் பட்டாலும், மிகவும் எரியும். இது சிறுநீரக நோய்த்தொற்று கிடையாது. மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படுவது சகஜம் தான்.

எத்தனை நாள் பயன்படுத்தலாம்..??

முதல் நாள் இரத்தப்போக்கைப் பொறுத்து, அடிக்கடி நாப்கின் வைத்துக்கொள்ளூம் பெண்கள், 3 ஆம் நாளில் இரத்தப்போக்கு குறைந்துவிட்டது என்று ஒரே நாப்கினையே பயன்படுத்துவது தவறு.

நாப்கினைப் பொறுத்தவரை விலை அதிகமானது, குறைவானது என்று கிடையாது. எது உங்களுக்கு அரிப்பை, ஒவ்வாமையை தரவில்லையோ, அந்த நாப்கினைப் பயன்படுத்துங்கள். பிரசவத்திற்கு பிறகு பயன்படுத்தும் அடர்ந்த காட்டன் நாப்கின் சௌகரியமானது கிடையாது. அது நல்லது தான் என்றாலும், வீட்டில் உள்ளபோது பயன்படுத்தலாம்.

இறுதியாக, ஒரு நாப்கினை அதிக நேரம் வைத்திருந்தால், புற்றுநோய் வரும் என்பதெல்லாம் பொய். மாதவிடாய் உங்களுக்கு ஏற்ற நாப்கினுடன் எந்தவித தயக்கமும் பயமுமின்றி கடந்து வாருங்கள், தோழிகளே..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon