Link copied!
Sign in / Sign up
1
Shares

மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் 5 வழிகள்..!

இன்றைய நாட்களில், பெரும்பாலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதியுகின்றனர். தாயான பின்போ அல்லது இளம் வயதிலேயோ என வயதில் பாரபட்சம் காட்டாமல், இன்றைய காலகட்டத்தில், அனைத்து பெண்டிருக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு ஏற்படும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வழிகளை பற்றி, இந்த  பதிப்பில் படித்து அறிவோம்..!

1. உடல் எடை..

நீங்கள் வயது மற்றும் உயரத்திற்கேற்ற உடல் எடை கொண்டிருக்க வேண்டும். அதிக உடல் எடை பலவித நோய்களையும், மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தலாம்..! அதனால், சரியான உடல் எடையை கொண்டிருக்க முயலவும்..!

2. உடற்பயிற்சி / உடற்செயல்கள்..!

தினசரி 30 நிமிடங்களாவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும்; நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிய உடற்பயிற்சிகளை தினம் மேற்கொள்ள வேண்டும். சமீபத்திய ஆய்வில், தினம் 3 மணி நேரம் வேலை செய்யும் பெண்களுடன் ஒப்பிடும் போது, 6 மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

3. சத்தான உணவுகள்..!

சத்தான, ஆரோக்கியம் தரும் உணவுகளை தினம் உட்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..! தினம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.. இப்படி சத்தான உணவுகளை உட்கொள்வது நோய் ஏற்படுவதைத் தடுக்கும்..!

4. மது மற்றும் புகை..!

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். தினசரி புகை பிடித்தல் மற்றும் 2-3 கிளாஸ் மது அருந்துவது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தீவிரப்படுத்தும்..

5. தாய்ப்பால்..!

தாய்ப்பால் அளிப்பது மார்பக புற்றுநோய், இதர புற்றுநோய் மற்றும் இதர நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் என சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது..!

மேலும் குடும்பத்தில் முன்னோர்கள் யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால், இந்த நோய் உங்களுக்கும் ஏற்படலாம். ஆகையால் தகுந்த மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை பெற்று மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon