Link copied!
Sign in / Sign up
0
Shares

மார்பகத்தின் அளவை பொறுத்து தாய்ப்பால் அமையுமா?

தாய்மையின் முதல் குணம் என்பது தாய்ப்பால் தருவதே ஆகும். இந்த தாய்ப்பால் தான் குழந்தைக்கு சத்துக்கள் தருவதாக தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மை தான். ஆனால் தாய்ப்பால் என்பது குழந்தைக்கு சத்துக்களை மட்டுமே தருவதல்ல. அதையும் தாண்டிய பாசத்தின், பந்தத்தின் பிணைப்பாக தாய்ப்பால் இருக்கிறது. இந்த தாய்ப்பால் என்பது எப்படி அமைகிறது? இதற்காக தாய்மார்கள் பெரிய மார்பகத்தை கொள்ள வேண்டியது அவசியம் தானா? வாங்க பார்க்கலாம்.

மார்பக அளவு:

தாய்ப்பால் என்பது அளவை பொறுத்து ஒருபோதும் அமைவதல்ல. உங்கள் மார்பகத்தில் இருக்கும் சுரக்கும் திசுக்களை பொறுத்தே தாய்ப்பால் என்பது அமையும். ஒரு சில பெண்களுக்கு சிறிய மார்பகமாக இருக்கும். எனினும் பால் சுரப்பு என்பது மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் இது தான்.

உடல் பருமன்:

ஒரு பெண்ணின் உடல் பருமன் என்பது அதிகம் இருப்பதால், அவருக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகம் இருக்கும் என அர்த்தம் இல்லை. ஒருசில பேருக்கு மிகவும் குறைவான பால் சுரப்புகூட இருக்கலாம். நீங்கள் பருமனாக இருக்க உங்கள் மார்பகத்தின் மேல்புற செல்கள் பால் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதேபோல் உற்ற நேரத்தில் பிறவா குழந்தையை பெற்ற தாய்மார்களுக்கும் போதிய பால் சுரப்பு இருக்க வாய்ப்பு மிகக்குறைவு.

பால் சேமிப்பு:

மார்பகம் பெரியதாக கொண்ட தாய்க்கு தாய்ப்பால் சேமிப்பு என்பது அதிகம். இதனால், குழந்தையின் பசியை சரியான நேரத்தில் இவர்களால் போக்க முடிகிறது. சிறிய மார்பகத்தை கொண்ட பெண்கள் பால் சுரப்பிற்கு அதிகம் உதவும் உணவை எடுத்துக்கொள்வது நல்லது.

பால் உறைதல்:

பெரிய மார்பகம் கொண்ட பெண்களுக்கு சில சமயத்தில் பால் என்பது மார்பகத்தில் உறைந்துவிடக்கூடும். இதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால் உங்கள் பால் சுரப்பு திடீரென குறையும்பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது உங்கள் மார்பகத்தை அவ்வப்போது தடவி விட்டுக்கொள்வது நல்லது. இதனால் பால் உறைவது தவிர்க்கப்படும்.

மார்பக பாதுகாப்பு:

புதிதாய் தாயானவர்கள் உங்கள் மார்பகத்தை மிகவும் கவனத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் மார்பகத்தை பாதுகாக்கும் உள்ளாடை அணியும்போது அது உங்களுக்கு உகந்ததாக இருத்தல் அவசியம். மிகவும் இறுக்கமாக மார்பக உள்ளாடை அணிவதை தவிர்த்திடுங்கள்.

தாய்ப்பால் தருவது என்பது குழந்தைக்கு மட்டும் உதவுவதல்ல. உங்களுக்கும் உதவ, இதனால் எதிர்க்காலத்தில் ஏற்பட துடிக்கும் பிரச்சனைகளும் உங்களை விட்டு விலகி எட்டி செல்லக்கூடும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon