Link copied!
Sign in / Sign up
1
Shares

மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்..!

இன்றைய சூழலில், பெண்களை மிரட்டும் பெரும் நோய்களில், உலகளவில் முதன்மையானதாக இருப்பது, மார்பக புற்றுநோய். இந்த நோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கான தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களில் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அதிகமான மற்றும் அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம்.

பெண்களின் மார்பகத்தில் கட்டி போன்ற மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்திற்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள் 

1. மார்பகத்தில் அசௌகரியமான உணர்வு, தொடர்ந்து வலி உண்டாதல் 

2. மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்

3. மார்புக்காம்பு மற்றும் வெளிச்சதை பகுதி சிவந்து போதல்

4. மார்பகத்தின் உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்

 

 

பரிசோதனைகள்..!

சில பெண்களுக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையெனினும் அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சிற்சில பரிசோதனைகளை செய்து, உண்டானது மார்பக புற்றுநோய் தானா என்பதை உறுதி செய்வார். உறுதியான பின் மருத்துவ ஆலோசனைப்படி, தகுந்த சிகிச்சை முறையையும், உணவு மற்றும் மருந்து முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon