Link copied!
Sign in / Sign up
198
Shares

மாமியார்கள் மருமகளிடம் கேட்கக்கூடாத 7 கேள்விகள்..!

மாமியார்கள் தங்கள் மகனைத் திருமணம் செய்து வருகை தரும் பெண்ணை, தன் மகள் போல் பார்த்துக் கொள்வது அரிதான விஷயமாக உள்ளது. ஆனால், எப்படிப்பட்ட மாமியாராக இருந்தாலும், பேரக்குழந்தைகள் பிறந்தவுடன் மனம் மாறி, மருமகளின் மீது பாசமழை பொழியத் தொடங்கி விடுவர். மாமியார்கள் பலவித குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் மருமகள் மீது சுமத்தினாலும், அவர்கள் மருமகளைக் கேட்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அக்கேள்விகள் என்னெவென்று இப்பதிப்பில் படித்தறியலாம், வாருங்கள் மருமகள்களே..! 

1. பேரக்குழந்தையின் பெயர்.?

மாமியார்கள், மருமகளிடம் ‘பேரக்குழந்தைக்கு தன் பெயரையோ அல்லது தன் கணவரின் பெயரையோ வைக்க வேண்டும்’ என்று கேட்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் குழந்தைக்கு எந்த பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்; அதை மாற்றும் அதிகாரம் எவருக்குமில்லை.

2. என்னைப்போல் வேலை..?

“நீ ஏன் என்னைப்போல் சமைக்கக்கூடாது, துடைக்கக்கூடாது, குழந்தையை கவனிக்கக்கூடாது..?” - இது போன்ற கேள்விகளை கேட்கக்கூடாது மாமியார்களே! ஒவ்வொரும் தனித்தனி வேலை செய்யும் விதம் கொண்டிருப்பர்; அதில் உங்கள் மூக்கை நுழைப்பது தவறு.

3. குழந்தையின் தூக்கம்..?

‘குழந்தையை நீ விரைவாக தூங்க வைக்கக்கூடாது?’ என்று சொல்லும் அதிகாரம் மாமிகளுக்கு இல்லை. குழந்தைக்கு எது நல்லதோ, அதையே தாயார் செய்வார்.

4. கணவரின் விருப்பம்..?

‘என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று உனக்குத் தெரியாது?’ இது கட்டாயமாக ஒவொரு மாமியாரும் தவிர்க்க வேண்டிய கேள்வி. உங்கள் பிள்ளைக்கு பிடித்ததால் தான், உங்கள் மருமகள் உங்கள் வீட்டிற்கு வந்திருப்பாள்; அவர்கள் இருவரும் திருமணத்தால் சரிபாதியாகி விட்டனர். ஒருவரை பற்றி மற்றவர் அறிவர்; புரிந்து கொண்டிருப்பர்.

5. மருமகளின் எடை..?

‘நீ நன்கு எடை கூடிவிட்டாய்?’ இது அறிவானவர் கேட்கக்கூடிய கேள்வி அல்ல. ஒருவரின் உடலமைப்பை பற்றி பேசி, அவரின் மனதைக் கஷ்டப்படுத்துவது நற்செயல் அன்று.

6. எங்கிருந்து வாங்கினாய்..?

‘பிரியாணி போன்ற ஏதேனும் உணவுகளை எங்கிருந்து வாங்கினாய்?’ இந்த கேள்வி அவசியமற்ற ஒன்று. பொருட்களை வாங்குவது பற்றியெல்லாம் வினவுவது நாகரீகமல்ல.

7. சமைத்தாயா..?

‘நீ இன்று சமைத்தாயா?’- இதுயெல்லாம் ஒரு கேள்வியா.. எல்லா நாட்களும் பெண்கள் தான் சமைக்கின்றனர்; எப்பொழுதேனும் கணவர்கள் சமையலில் உதவலாம். ஆதலால், மாமிகளே இக்கேள்வியைத் தவிருங்கள்.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, மற்றோரு பெண்ணை இது போன்ற கேள்விகளால், கஷ்டப்படுத்தும் மாமிகள், தங்களை அந்த இடத்தில் அல்லது தங்கள் மகளுக்கு இது மாதிரி நேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்; செயல்பட வேண்டும். பதிப்பு பிடித்தால், பகிருங்கள்..! மாமியார்கள் தங்கள் தவறுகளை உணர, பகிர்வு அவசியம்…

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon