Link copied!
Sign in / Sign up
1
Shares

மாதவிடாய் வலிகளுக்கான நிரந்தர ஆயுர்வேத தீர்வு..!

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால், பயங்கர வயிற்று மற்றும் முதுகு வலிகள் ஏற்படுகின்றன; மேலும் இக்காலத்தில் பெண்களுக்கு அதிகமான சோர்வும், அசௌகரிய உணர்வும் ஏற்பட்டு, அவர்களால் எந்த வேலையிலும், எச்செயலிலும் முழுதுமாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பெண்கள் சந்திக்கும் இப்பிரச்னைகளை எல்லாம் போக்க உதவும் ஒரு அற்புத ஆயுர்வேத மருந்து பற்றி இப்பதிப்பில் கொடுத்துள்ளோம்; பதிப்பை படித்து வலியில்லா வாழ்வு வாழ்ந்து, வானம் உயர வளர்ந்து சாதனை படைக்குமாறு வாழ்த்தி, பதிப்பினை உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம்..! 

தேவையானவை.. 

கருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1 தேக்கரண்டி, பனை வெல்லம் - தேவைக்கேற்ப

செய்முறை..

மேற்கூறிய பொருட்கள் அத்தனையையும் ஒன்றாய் கலந்து, அரைத்துத் தூளாக்கி, இப்பொடியை 1/2 தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக்கொண்டு 2 நாள்களில், 2 வேளையாக உண்டு வந்தால் மாதவிடாய் கால வயிற்றுவலி மற்றும் முதுகு வலி ஏற்படாமல் இருக்கும்..!

பெண்களின் கர்ப்பகாலத்திலும் அதாவது 8 மற்றும் 9 ஆம் மாதத்தில் மற்றும் பிரசவ சமயத்தில் ஏற்படும் வாயுத்தொல்லை, அடிவயிற்று வலி போன்றவை ஏற்படமால் தடுக்க இம்மருந்து உதவும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon