Link copied!
Sign in / Sign up
78
Shares

பெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..!

கர்ப்பிணிகளும், பிரசவித்த இளம் தாய்மார்களும் இடுப்பு மற்றும் முதுகு வழியால், மிகவும் அவதிப்படுவர். வளர்ந்து, தாயகப்போகும் அல்லது தாயான சமயத்தில், பெண்கள் வயதிற்கு வந்த சமயத்தில், தங்களுக்கு வற்புறுத்தி அளிக்கப்பட்ட மேஜிக் உணவை மறந்திருப்பர். 

குழம்பாதீர்கள் பெண்களே! வேறொன்றுமில்லை.. உளுந்து! அது தான் அந்த மேஜிக் உணவு. உளுந்தின் மருத்துவப் பயன்கள் ஏராளம்; இருந்தாலும் பெண்களின் இடுப்பெலும்பை வலுவாக்கி, வலிகளை போக்குவதில் உளுந்திற்கு நிகர் வேறு உணவில்லை. ஆகையால், பெண்களின் இடுப்பெலும்புக்கு நலம் சேர்க்கும், முதுகு வலிக்கு டாடா! பை பை! சொல்ல வைக்கும் உளுந்தங் கஞ்சி எப்படி தயாரிப்பது என்பது பற்றி இப்பதிப்பில் காணலாம்...!!

தேவையான பொருள்கள்

தோல் உளுந்து - 1/2 கப், பச்சரிசி - 1/4 கப், தேங்காய் துருவல் - 1/2 கப், கருப்பட்டி - 1/4 கப், பூண்டு பற்கள் - 4, வெந்தயம் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடி கட்டி வைக்கவும்.

3. குக்கரில் உளுந்தம்பருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு, மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

5. நீராவி அடங்கியதும் மூடியை எடுத்து ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.

6. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான், வலிகளை போக்கி, வலிமையை தரும் சுவையான உளுந்தங் கஞ்சி தயார்..! பருகுங்கள் பெண்களே! பலம் பெறுங்கள்! பயனென்று கருதினால், மற்றோர் பயன்பெற பகிருங்கள்..! உங்களது பகிர்வு மற்றோர் வலியிலிருந்து, நிவாரணம் பெற உதவட்டும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon