Link copied!
Sign in / Sign up
26
Shares

குழந்தைகள் குண்டாவது நல்லதா? கெட்டதா?

அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை ஆரோக்கியமாக, நலமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையினால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி தேவைக்கு அதிகமான உணவினை அளித்து குழந்தைகளை குண்டாக்கி விடுகின்றனர். பெற்றோர் அறிமுகப்படுத்தும் இந்த உணவு முறையால், குழந்தைகளும் அதிகம் உண்ணும் பழக்கத்தை, சிறு வயது முதலே கடைப்பிடிக்கத் தொடங்கி விடுகின்றனர். இப்படி குழந்தைகள் அதிகம் உண்டு குண்டாக இருப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்..! 

குழந்தைகளின் உடல் எடை குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சில கருத்துக்கள் இந்த பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்து படித்து பயனடையலாம்..! 

புள்ளிவிவரம்..!

உலகம் எங்கிலும் குண்டுக் குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள்; வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் சோம்பலான வாழ்க்கையைப் பின்பற்றுவதால் குண்டுக் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கிறது.

6 முதல் 19 வயதுள்ள குழந்தைகளில், 16% குழந்தைகள் குண்டாக உள்ளனர். மலேசியாவில் சென்ற 2 வருடங்களில், குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது; இதேநிலை தொடர்ந்தால், ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காக அதிகரிக்கும்.

விளைவுகள்..!

குழந்தைகள் அதிக எடை கொண்டிருந்தால், அவர்களால் தவழவோ, நடக்கவோ இயலாத நிலைமை ஏற்படலாம். அவர்களால் படுத்து மட்டுமே இருக்க இயலும்; அவர்களின் அதிக உடல் எடையை தாங்கி, எந்தவொரு வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்..!

குண்டுக் குழந்தைக்கு ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன; ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம். 

இது குறித்து ஒரு ஆய்வு நம் நாட்டிலும் நடத்தப்பட்டது; அதன்படி குழந்தைகளின் எடை, ரத்த அழுத்தம், உயரம் அளவிடப்பட்டதில் 15% குழந்தைகள் மிகவும்  குண்டுக் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதிர்ச்சி தகவல்கள்..!

நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல அதிர்ச்சி தகவல்களும் உண்டு; குண்டான பெண் குழந்தைகள் 10 வயதுக்கு முன்னே பருவம் அடைந்து விடுகிறார்கள். மேலும் குண்டு ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; குண்டான ஆண் குழந்தைகளுக்கு பெண்களைப் போல், மார்பகம் பெரிதாகிறது.

ஆகையால், அந்த ஆண் குழந்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்; படிப்பில் நாட்டம் குறைந்து, பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுகிறது. குண்டான பெண் குழந்தைகளுக்கோ பின்னாளில் எலும்புத் தேய்மானமும், மாதவிடாய் கோளாறுகளும், கர்ப்பப்பை நோய்களும், மலட்டுத்தன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது; எனவே, குண்டுக் குழந்தை ஆரோக்கியமானது அல்ல. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon