Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தை வளர்ப்பை எளிதாக்க உதவும் 5 விஷயங்கள்..!

குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான விஷயம்; இது சிற்பி சிலையை வளர்ப்பது போன்ற கலை. கல்யாணத்தை கட்டிப்பார்; வீட்டைக் கட்டிப்பார் என்று கூறுவார்களே, அந்த பட்டியலில் குழந்தையை பெற்று வளர்த்துப்பார் என்பதையும் சேர்க்க வேண்டும். அவ்வளவு முக்கிய, கஷ்ட நஷ்டங்கள் நிறைந்த விஷயமே குழந்தை வளர்ப்பு.

அப்படிப்பட்ட குழந்தை வளர்ப்பை எளிதாக்கும் சில விஷயங்கள் குறித்து இப்பதிப்பில் படித்து அறிவோம்..!

1. ஆரம்பம் - அவசியம்..

குழந்தைகள் விளையாடச் செல்லும், படிக்கச் செல்லும் இடங்கள் என குழந்தைகள் செல்லும் இடங்கள் அனைத்தும் எப்படிப்பட்டவை, அதை நடத்துபவரின் குணாதிசயம் என்ன, குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள் என்பதையெல்லாம் சிறுவயதிலேயே கவனித்து, சீர்படுத்தி விட்டால், உங்கள் குழந்தைகள் வளர்வது பற்றிய பயம் கொள்ளத் தேவையில்லை.

அதாவது குழந்தைகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சியிலேயே, சரியான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு கொடுத்து வளர்த்துவிட்டால், குழந்தை தவறான பாதையை பற்றிய எண்ணமே இல்லாது, சரியான பாதையில் மட்டுமே சென்று, வாழ்வில் வெற்றி வாகை சூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

2. குழந்தையின் சமூகப் பிரச்சனைகள்..

குழந்தைகள் வெளியில் செல்லும் போதோ, வெளியிடங்களில் இருக்கும் போதோ "உச்சா, காக்கா" என்று உங்களை தொந்தரவு செய்யக்கூடும்; அம்மாதிரியான தருணங்களில், தேவையான பொருட்களை, விஷயங்களை முன்கூட்டியே யோசித்து எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் குழந்தைகள் தன் சக வயது நண்பர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு வந்தால், குழந்தையை திட்டி, அடிக்காமல், சூழ்நிலையை புரிந்து கொண்டு, அன்பாக குழந்தையின் தவறை சுட்டிக்காட்டி திருத்துங்கள். மேலும் குழந்தைக்கு வன்முறையை விட, அன்பே அதீத பலன்களை தரும் என்பதை எடுத்துக்கூறி புரிய வையுங்கள்..!

3. பாலூட்டும் சவால்..!

குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில், குழந்தையை சரியாக பால் பருக செய்வது எப்படி என்று திட்டமிட்டு, அதன்படி குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். மேலும் குழந்தைகள் உணவு உண்ணும் காலம் வரும் போதும் அவர்கள் எவ்வித உணவையும் வெறுத்து ஒதுக்காமல், அனைத்து வகை உணவுகளையும் உண்ணுமாறு செய்வதும் உங்கள் கடமையே!

சிறு வயதிலேயே அனைத்து வகை உணவுகளையும் குழந்தைக்கு பழக்கி விட்டுவிட்டால், பின்னாளில், குழந்தைகளின் உணவு விஷயத்தை குறித்த பயத்தை விட்டுத்தள்ளலாம்.

4. உங்களுக்கான நேரம்..!

குழந்தையை, குடும்பத்தை கவனித்துக்கொள்ள எத்தனை அக்கறை காட்டுகிறீர்களோ, எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ, அதே அளவு உங்களை கவனித்துக் கொள்ளவும், உங்கள் வாழ்க்கை இலட்சியத்தை எட்டவும் தேவையான காரியங்களை செய்யவும் மறவாதீர்.

5. சரியான பெற்றோர்!

அனைத்துவித விஷயங்கள், செயல்பாடுகள், கற்றல் குறிப்புகளையும் குழந்தையின் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுத்து, அவர்கள் அதில் வல்லவர்களாக திகழ உதவுங்கள்; அதற்கான வழிவகை செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்து, ஒரு நல்ல குழந்தையாக, நல்ல குடிமகனாக குழந்தை திகழுமாறு, குழந்தையை வளர்த்து விட்டால், நீங்கள் தான் சரியான பெற்றோர்! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon