Link copied!
Sign in / Sign up
1
Shares

குறும்புத்தனமான இரட்டையர்களை சமாளிக்க 5 வழிகள்...

குறும்புத்தனமான குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை விட கடினம் என்ன தெரியுமா? இரண்டு குறும்புத்தமான குழந்தைக்கு உணவு ஊட்டுவது. நீங்கள் இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்திருந்தால், அதீத அதிர்ச்சியில் இருந்து அதீத மகிழ்ச்சி நிறைந்த உணர்ச்சிகளின் அனுபவத்தை அனுபவிப்பீர்கள்! மேலும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் ஆலோசனைகளும் உங்களை சுற்றிவரும்.

ஆனால் இவை எதுவும் நீங்கள் சந்திக்க போகிற முதல் அனுபவத்திற்கு உங்களை தயார்படுத்தாது, இரட்டை குழந்தைகளுடன் உங்களுக்கு தொல்லைகளும் தொடங்கும். இரட்டை குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்பது கடினமானது. குறிப்பாக அவர்களை தூங்கவைப்பதும், உணவு ஊட்டுவதும் மிகவும் கடினமானது. பெரும்பாலான குழந்தைகள் உணவு உண்பதில் கவனம் செலுத்தமாட்டார்கள் அதிலும், இரட்டை குழந்தைகளை உணவு உண்ண வைப்பது கடினமான காரியமாகும்.

இதிலிருந்து உங்களை காப்பாற்ற சில வழிகள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. ஆர்வமாய் உணரச்செய்யுங்கள்

தினசரி சாப்பாடுகளில் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உணவு விருப்பங்களை கொடுங்கள். அவர்கள் அதிக விருப்பங்களைக் கொண்டிருப்பது நல்லது, அதன்பிறகு அவர்களுக்கு சில உணவுகள் சாப்பிட மாட்டார்கள், வேறு எந்த உணவையும் சாப்பிட . மேலும், பிடித்த உணவில் பிரச்சனை என்னவென்றால் அந்த உணவுகள் உங்கள் குழந்தைகளுக்கு சலித்துவிடும்.எனவே, அவர்களுக்கு உணவை நிறைய வகையான உணவுகள் கொடுத்து ஆர்வமாய் உண்ண செய்யுங்கள்.

2. வேடிக்கையாய் செய்யுங்கள்

விளையாடிக்கொண்டே உணவு உண்பது என்பது அவர்களை குதூகலப்படுத்தும். இரட்டை குழந்தைகளாய் இருக்கும்போது அவர்களில் யார் முதலில் உணவு உண்கிறார்கள் என்று விளையாட்டை போட்டி வைப்பது சிறந்த வழியாகும். இருப்பினும், வெற்றி பெற்றால் பரிசு கொடுத்து பழக்கவேண்டாம் இது அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும்.

3. சரியான உணவு நேரத்தை கடைப்பிடித்தல்

உங்களின் செல்ல குழந்தைக்கு சரியான நேரத்தில் சாப்பிடுவதை பழக்குங்கள் இது அவர்களுக்கு எதிர்காலத்திலும் பயனளிக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுபவர்களாயின் அவர்கள் உணவில் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே சரியான நேரத்தில் உணவு கொடுப்பதோடு உணவுக்கு முன் குளிர்பானங்களையோ, சிற்றுண்டிகளையோ கொடுக்காதீர்கள்.

4. ஒன்றாக சாப்பிடுங்கள்

குடும்பமாய் அனைவரும் அமர்ந்து உண்பதை பழக்கமாக வைத்திருங்கள். இருவருமே வேலைக்கு செல்பவர்களாய் இருந்தாலும் முடிந்தவரை இதை பின்பற்ற முயற்சியுங்கள். எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும்போது அவர்கள் உங்களை பார்த்து வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அதே உணவை நீங்களும் முடிந்தவரை உண்ணுங்கள். இது அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் அமையும்.

5. உட்படுத்துதல்

குழந்தைகளை சமையல் வேலைகளில் உட்படுத்துங்கள். கடைகளுக்கு செல்லும்போது அவர்களை உடன் அழைத்துச்செல்லுங்கள். நீங்கள் வாங்கும் காய்கறிகளை காட்டுவதோடு, உணவு சமைப்பது எவ்வளவு ஆர்வமான வேலை என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள். இது அவர்கள் உணவை நன்கு உண்ண உதவுவதோடு உணவை வெறுப்பதையும் குறைக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon