Link copied!
Sign in / Sign up
0
Shares

குறிப்பிட்ட வயதில் பெண்களை தாக்கும் நோய்களும், தீர்வுகளும்


மனிதர்களை நோய் தாக்குவது சாதாரண ஒன்று. அதே போல் பெண்களுக்கு நோய் ஏற்படுவதும் இயல்பான ஒன்று தான் என்றாலும், அவர்களுக்கு ஒவ்வொரு வயதிலும் சில நோய்கள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு குறிப்பிட்ட வயதில் ஏற்படும் நோய்களையும், தீர்வுகளையும் அறிய வேண்டியது அவசியம். இங்கு பெண்களுக்கு குறிப்பிட்ட வயதில் ஏற்படும் நோய்களையும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் பார்க்கலாம்.

10 வயது

1 கால்சியம் ​​பற்றாக்குறை நோய்,

2 இரும்புச்சத்துப் ​​பற்றாக்குறை நோய்,

3 நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நோய்.

தீர்வு

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அனைத்தையும் தவிர்க்காமல் போட வேண்டும்.

11 முதல் 20 வயது வரை

1 பூப்பெய்துதல், மாதவிடாய் பிரச்னைகள்

2 சு​கா​தாரமின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள்

தீர்வு

ஹெ.பி தடுப்பூசி, இரும்புச்சத்து, கால்சியம் அளவு போன்றவற்றை பராமரித்தல், பாலியல் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதோடு தற்காப்பு கலைகளையும் கற்று கொடுக்க வேண்டும்.

21 முதல் 40 வயது வரை

1 இரத்தசோகை

2 ஃபோலிக் அமிலக் குறைபாடு

3 பி.சி.ஓ.டி, பருமன்

தீர்வு

கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, உடலில் ஊட்டச்சத்துக்களைப் பராமரிப்பது, தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்து எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். இவற்றை செய்தால் நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

41 முதல் 60 வயது

1 மெனோபாஸ் பிரச்னைகள்

2 அதீத மாதவிடாய் இரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ்

3 எலும்பு அடர்த்திக் குறைவு

4 அதீத உடற்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்

5 அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள்

6 சர்க்கரை நோய்

தீர்வு

தொடர்ச்சியாகக் கால்சியத்தை எடுத்துக்கொள்வது, கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, தினசரி உடற்பயிற்சியுடன் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் நோயை தவிர்க்கலாம்.

60 வயதுக்கு மேல்

1 இதய நோய்கள்

2 சர்க்கரை நோய்

3 கண் நோய்க​ள்​

4 எலும்பு அடர்​த்திக்​ குறைதலால் ஏற்படும் எலும்பு முறிவு

தீர்வு

சமச்சீர் உணவு, குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புகள் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல், தினசரி உடற்பயிற்சியுடன் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் நோயை தவிர்க்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon