Link copied!
Sign in / Sign up
1
Shares

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பது எப்படி??!

குழந்தையை பிரசவிப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் சவாலான விஷயம் மட்டும் அல்ல சந்தோஷமான விஷயமும் தான். ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் 40 வாரங்கள் வளர்கிறது; ஆனால் சில சமயங்களில் சில பெண்களுக்கு குழந்தை பிறப்பு 37வது வாரத்திலேயே உண்டாகி விடுகிறது. இம்மாதிரியான குறைமாதக் குழந்தைகளை பராமரிப்பது என்பது குறித்து தெள்ளத்தெளிவாக இந்த பதிப்பில் அளிக்கப்பட்டுள்ளது; குறைப்பிரவ குழந்தைகளை பெற்று எடுத்த தாய்மார்கள் படித்து பயனடையவும்..!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!

குறைமாதக் குழந்தைகளை 2 ஆண்டுகள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தை 3 கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறந்திருந்தால், அவர்களின் எடையின் முன்னேற்றத்தை நன்றாக கவனிக்க வேண்டும். குறைமாதக் குழந்தைகள் விட்டமின் மற்றும் இரும்புச்சத்து பற்றாக்குறையுடனும், மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடனும் பிறந்திருப்பர்; எனவே அவர்களுக்கு தாய்ப்பாலினை 6 மாதங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும். இரும்பு மற்றும் விட்டமின் நிறைந்த உணவுகளை தாய் உட்கொண்டு, பாலின் மூலம் குழந்தைக்கு அச்சத்துக்களை சேர்க்க வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனையுடன், மிக அத்யாவசியமெனில் இரும்புச்சத்து டானிக், மாத்திரைகள் போன்றவற்றை அளிக்கலாம்.

வளர்ச்சி 

குறைமாதக் குழந்தைகளின் வளர்ச்சி மற்ற குழந்தைகள் போன்று இருக்காது; இவர்களின் வளர்ச்சி வீதம் மெதுவாகவே இருக்கும். குழந்தை குப்புற விழுதல், உட்கார்தல், தவழ்தல் மற்றும் நடத்தல் என அனைத்து செயல்களுமே மெதுவாகத்தான் நடக்கும்; வளர்ச்சி மிகவும் தாமதப்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

பாலூட்டுதல் 

குறைமாதக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8-10 தடவை தாய்ப்பாலூட்ட வேண்டும்; 4 மணி நேரத்திற்கு ஒரு முறை என அவர்களுக்கு பாலூட்ட வேண்டும். நீங்கள் சரியாக பாலூட்டினால், குழந்தைகள் ஒரு நாளைக்கு 8 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.

திட உணவுகள் 

முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளுக்கு 4-6 மாதங்களிலேயே திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்து விடுவர்; ஆனால் குறைமாதக் குழந்தைகளுக்கு அவ்வாறு அளித்தல் கூடாது. ஏனெனில், முதலில் இக்குழந்தைகள் முழு வளர்ச்சியடைய வேண்டும், அப்பொழுது தான் அவர்களின் விழுங்கும் திறனும், சீரண மண்டலும் நன்றாக வளர்ச்சியடையும். மேலும் குழந்தைகள் நன்றாக வளர்ந்த பின்னர் திட உணவுளை அவர்களுக்கு அளிப்பது நல்லது; மருத்துவ ஆலோசனை பெற்று அளிப்பதும் சாலச் சிறந்தது.

உறக்கம் 

குறைமாத குழந்தைகள் முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளை விட அதிக நேரம் தூங்குவார்கள்; இக்குழந்தைகளுக்கு குப்புறப்படுத்து உறங்குவது, மென்மையான விரிப்புகள் போன்றவற்றால் தீடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகி, இறப்பு (SIDS) கூட நேரலாம்.

கண் பார்வை 

குறைமாத குழந்தைகள் மாறு கண் பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது; அதாவது 2 கண்களிலுள்ள கருவிழிகளும் பார்க்கையில் ஒரே விதமாக இருக்காது, இப்பிரச்சினை குழந்தைகள் வளர வளர மாறிவிடும். இவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை ரெட்டினோபதி ப்ரீமெச்சுருட்டி (ROP). இக்குறைபாட்டால், குழந்தைகளின் கண்களிலுள்ள இரத்தக்குழாய்கள் அசாதாரண வளர்ச்சியடைந்து காணப்படும். எனவே இப்பிரச்சனைகளை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது நல்லது.

கேட்கும் திறன் 

குறைமாத குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கேட்கும் திறன் குறைவாக இருத்தல். இதற்கும் மருத்துவரை சந்தித்து உடனடி சிகிச்சை பெறுவது நல்லது.

பயணம் 

குறைமாத குழந்தையை அழைத்துக் கொண்டு, நீங்கள் பயணம் செய்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; அவர்களுக்கென பாதுகாப்பான இருக்கையை அமைத்து, குழந்தையின் தலை அசையாதபடி, குழந்தைக்கு அசதி, அசௌகரியம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளல் அவசியம்.!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon