Link copied!
Sign in / Sign up
5
Shares

குளிர்காலத்தில் பாத வெடிப்பை சரி செய்ய

வயது அதிகரிக்க அதிகரிக்க உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் வயது அதிகரிக்கும் போது காலில் தோலில் ஏற்படும் பருமன். பதத்தில் ஏற்படும் வெடிப்பிற்கு இதுவே காரணமாகிறது. குளிர்காலத்தில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாகி, உங்களை கவலையடைய செய்து விடும்.

 

உங்கள் கால்களில் வெடிப்பு ஏற்பட்டு உலர்ந்து காணப்படுகிறது. அதற்காக நீங்கள் சில கிரீம் மற்றும் விலை உயர்ந்த மருத்துவப் பொருட்களை பயன்படுத்தி தீர்வு பெற நினைத்திருப்பீர்கள். ஆனால், அவை பலன் தராமல் போகவே, நீங்கள் விரக்தியடைந்து அனைத்தையும் கைவிட்டிருப்பீர்கள். இதற்கு நிறைந்த தீர்வு பெற விரும்பினால், இரவு நேரத்தில் 30 நிமிடம் செலவழித்தால் போதும். இங்கு குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பை சரி செய்யும் வழிகளை பார்க்கலாம். 

செய்ய வேண்டியவை

1 வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு, கிளிசரைன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் அந்த நீரினுள் வைக்கவும். பின் பாதங்களை சுத்தப்படுத்த உதவும் படிகக்கல்லை பயன்படுத்தி மென்மையாக தேய்க்கவும்.

2 நன்றாக பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். அந்த வாழைப்பழ மசியலை கால்களில் பூசிக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக தடவுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருங்கள்.

3 பின் சூடான நீரில் மென்மையாய் தேய்த்து பாதங்களை கழுவுங்கள்.

4 கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் அனைத்தையும் ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். அதை கணுக்கால் மற்றும் பாதங்களில் தடவுங்கள். பின் கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு உறங்குங்கள்.

5 மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் காலை சுத்தமாக கழுவவும்.

6 இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் கால்களில் மாற்றத்தை காணலாம்.  

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon