Link copied!
Sign in / Sign up
16
Shares

குழந்தைகளுக்கு குடற்புழு உருவாகாமல் தவிர்க்க

குழந்தைகளுக்கு குடற்புழு பாதிப்பு எளிதில் ஏற்படும். அவர்கள் கண்டா இடங்களில் விளையாடுவது, உடலை சுத்தமாக வைத்து கொள்ளாதது என பலவற்றால் பரவுகிறது. இது சில சமயத்தில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் பாதிக்கிறது. இவை நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமில்லாமல், குடல் இயக்கங்களை  பாதித்து உயிருக்கே  ஆபத்தாய் முடியும். குடற்புழுக்கள் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

தவிர்க்கும் வழி

“வருமுன் காப்பதே சிறந்தது” எனும் பழமொழியின் படி, வந்தபின் வருந்துவதை விட முன்பே அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது.

1 எப்போதும் உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும்.

2 குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

3 திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

4 கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

5 சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.

6 நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.

7 குழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க வேண்டும்.

8 குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

9 எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

10 ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

11 சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

12 காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

13 நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.

14 பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும்.

15 சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.

16 காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.

17 அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

18 வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

19 தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும்.

21 மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.

22 வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

இவற்றை பின்பற்றி வந்தால் குடற்புழுக்களின் உருவாக்கத்தை தவிர்க்கலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon