Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகள் தவழ்வதில் பெற்றோர்களின் பங்கு இவ்வளவு இருக்கிறதா?

குழந்தை பிறப்பில் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான நிலையாகும். குழந்தைகள் தவழ்வது தானாக வரும் ஒரு பழக்கம் தானே தவிர, யாராலும் வருவதில்லை. அதாவது உங்கள் குழந்தைகள் சுதந்திரமாக உலாவ தொடங்கும் காலம் தான் இந்த தவழ்தல். வழக்கமாக, குழந்தைகள் தனது 6 முதல் 13 மாதங்களில் தவழ தொடங்குவார்கள். இந்த தவழ்தல் நிலையில் குழந்தைகளின் கைகளும், கால்களும் அசைபோட, அதற்கு ஏற்ப அதன் முகமும் சிரித்த வண்ணம் இருக்கும்.

தவழ்தல் எப்படி நிலைப்பெறுகிறது?

குழந்தைகள் கற்கும் முதல் கல்வி தவழ்தல் தான். குழந்தைகள் மெல்ல தவழும் போது தன் மனம் சொன்ன ஒன்றை கேட்டு, இடையில் காண்பதை வாயில் வைப்பார்கள். தவழ்வதற்கு முன்பு குழந்தைகளின் தலை நேராக நிற்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் தான் மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காமல் தன் வேலையை மட்டுமே பார்க்க நினைப்பார்கள்.

தவழ்தல் பற்றி...

உங்கள் குழந்தைகள் மெல்ல தன் கைகளை முன்னும் பின்னும் கொண்டு செல்ல, அதற்கு ஏற்ப அதன் கால்களும் ஒய்யாரமாய் தரையை தேய்க்கும். ஆனால், எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி தவழ்வதில்லை. 

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நேரத்தை செலவிடுங்கள்:

உங்கள் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே நீங்கள் ஏதாவது மெல்ல விளையாட முயற்சிக்கலாம். இதனால் குழந்தையின் தலை, கழுத்து, முதுகு மற்றும் கால் தசைகள் வலுவானதாக இருக்க, தவழும் போது மிகவும் பயனுள்ளதாக உங்கள் குழந்தைக்கு இருக்கக்கூடும். அமைதியான இடத்தில் பாட்டு பாடுவது கூட, கருவில் இருக்கும் குழந்தையை தாளம் போட வைத்து துள்ளிக்குதித்து உங்களை உதைக்கவும் செய்யும்.

தலையை அசைக்க உதவுதல்:

உங்கள் குழந்தைகள் உற்றுப்பார்க்கும் போது புத்தகத்தின் பக்கங்களை அங்கும் இங்கும் திருப்பிடலாம். இல்லையேல், ஒரு பொருளை அங்கும் இங்கும் மாற்றி வைத்து அவர்கள் தவழ்ந்து வரத்துடிப்பதை ரசிக்கலாம்.

தவழ்தலை ஊக்கப்படுத்துங்கள்:

அவர்கள் ஒரு பொருளை நோக்கி வர, அதை தன் கைகளால் எடுக்க நீங்கள் அதை ஊக்கப்படுத்தும்படி ஏதாவது செய்யுங்கள். இதனால், குழந்தைகளின் தவழும் திறன் என்பது விரைவில் வேகத்தை எட்ட, மூளையும் சுறுசுறுப்புடன் இருக்கும். 

தேவையற்ற பொருளை மறைப்பது:

உங்கள் குழந்தை தவழ்ந்து வரும்போது தேவையற்ற பொருட்கள் இடையூறாய் இருப்பதை தவிர்த்திடுங்கள்.

குழந்தை நடை வண்டி வேண்டாம்:

இதனால் உங்கள் குழந்தையின் தவழ்தல் நிலை என்பது தாமதமாகிறது. குழந்தைகளுக்கு தவழ்தல், நடத்தல் இப்படி ஒவ்வொரு நிலையாக இயல்பாக கற்றுக்கொடுக்க பழகுங்கள். 

உதவி வேண்டுமா?

ஒரு சில குழந்தைகள் தவழ விரும்பாமல் தவிர்த்திடும். உங்கள் குழந்தை 12 மாத குழந்தையாக இருப்பின் தவழவில்லை என்றால், மருத்துவரின் ஆலோசனையை மறக்காமல் பெற வேண்டியது அவசியமாகும்.

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon