Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தையுள்ள வீட்டைத் தூய்மையாக வைக்க உதவும் 5 வழிகள்..!

குழந்தைகள் பிறந்த பின், அவர்கள் இருக்கும் அறை மற்றும் வீடு மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த புதிதில், குழந்தைகள் மிகக்குறைந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடத்தின் அசுத்தத்தால், எளிதில் நோய்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள்  இருக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று படித்தறியுங்கள்..!

1. காலணிகள்..!

காலணிகளை வீட்டின் வெளியிலேயே விட்டுவிடுதல் வேண்டும்; ஏனெனில் இதனால் ஏதேனும் நோய்தொற்று ஏற்படலாம். மேலும் காலணியை வீட்டின்னுள்ளும் அணிய விரும்பினால், வீட்டினுள் அணிய மற்றும் வெளியில் அணிய என தனித்தனியாக இரு காலணிகளை பயன்படுத்தவும்..!

2. தாவரங்கள்..!

காற்றை மட்டும் தூசுகளை உறிஞ்சும் தாவரங்களை, செடிகளை வீட்டினுள் வைப்பது நலம் பயக்கும். மேலும் வீட்டைச் சுற்றி இடம் இருந்தால், குழந்தைக்கு நலம் தரும் துளசி, ஓமவல்லி, தூதுவளை போன்ற செடிகளை வளர்க்கலாம்..

3. விரிப்புகள்..

தரையில் விரிந்திருக்கும் விரிப்புகளை தூய்மையாக வைத்திருக்கவும்; மேலும் குழந்தைகள் உறங்கும் மெத்தை விரிப்புகள், சோபாக்கள் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள்..!

4. காற்றோட்டம்..!

வீட்டை காற்றோட்டம் உள்ளதாக வைத்துக் கொள்ளவும்; மேலும் கழிவறைகள், குளியலறைகள் என அனைத்தும் காற்றோட்டம் உள்ளதாக வைத்துக் கொள்ளவும். இது நோய்தொற்றுகளுக்கான வாய்ப்பை குறைக்கும்..!

5. சமையல்..!

சமைக்கும் பொழுது பயன்படுத்தப்படும் காய்கறிகள், பழங்கள், மற்ற பொருட்கள் என அனைத்தும் சுத்தமானதாக உள்ளதா எனவும், நன்றாக கழுவி உபயோகிக்கிறீரா எனவும் சோதியுங்கள்; மேலும் சுகாதாரமான முறையில் சமையுங்கள். குழந்தைகளுக்கு உணவினால், எந்த பிரச்சனையும் நேராமல் பார்த்துக் கொள்ளவும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon