Link copied!
Sign in / Sign up
16
Shares

குழந்தையுடன் விளையாடக்கூடிய வேடிக்கை விளையாட்டுகள்..!

குழந்தை பருவத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டில் அதீத ஆர்வம் இருக்கும். பெரும்பாலுமான நேரங்களில் குழந்தைகள் பெற்றோர்கள் தங்களுடன் விளையாட வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவர். அப்படி ஆசைப்படும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது பெற்றோராகிய உங்களின் கடமை. ஆகையால், பெற்றோர்களே! குழந்தைகளுடன் விளையாடக்கூடிய, அவர்களுக்கு பிடித்த வேடிக்கை விளையாட்டுக்கள்  பற்றி படித்தறியுங்கள்..

1. புதையல் யாருக்கு..?

இந்த விளையாட்டில், நீங்களோ அல்லது குழந்தையோ எதையேனும் எங்கேனும் ஒளித்து வைத்து விட வேண்டும். ஒளிக்கப்பட்ட பொருளை புதிர்கள் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த விளையாட்டு. இது அவர்களின் கூர்ந்து நோக்கும் திறனை மேம்படுத்தும்.

2. நடித்துக் காட்டுதல்..

இதில் நயன பாஷை மூலம் படம் அல்லது பாடலை வாய் திறவாமல் நடித்துக் காட்டி விளக்க வேண்டும்; உங்களுடன் விளையாடும் மற்றவர் நீங்கள் நடித்துக் காட்டியதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்..!

3. ஓவியம்..

இதில் நீங்களும் குழந்தையும் ஒரே நேரத்தில் ஓவியம் வரைய துவங்க வேண்டும். யார் முதலில் அழகாக வரைந்து முடிக்கிறார்கள் என்பதனை பார்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தையின் ஓவியத் திறன் மேம்படும்..!

4. ஒளிந்து விளையாடுதல்...

ஒளிந்து விளையாடும் விளையாட்டு. இது ஆதி காலத்தில் இருந்து நம்மவர்களால் விளையாடப்படும் விளையாட்டு; இதனை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடன் விளையாடி மகிழுங்கள்; குழந்தைகளை மகிழ்வியுங்கள்..!

5. பசில்..

Puzzles எனப்படும் உருவங்களை அல்லது பொருட்களை ஒன்று சேர்க்கும் பொருளை உங்கள் குழந்தைக்கு அளித்து ஒன்று சேர்த்து காட்ட சொல்லுங்கள். அவர்கள் அதை ஆர்வமுடன் செய்வர். மேலும் அதை சரியாக முடிக்கையில் அவர்களின் முகத்தில் தோன்றும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது..

விளையாட்டு என்பது சாதாரண விஷயமல்ல; நேரப்போக்கல்ல. இது உறவை பலப்படுத்தும்; மேலும் குழந்தைகளின் புத்திக் கூர்மையையும் மேம்படுத்தும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon