குழந்தையின்மைக்கான காரணங்களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமான பிரச்னை இது. கருக்குழாய் அடைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதைக் கவனிக்க வேண்டிய அவசரமோ, அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகளோ பலருக்கும் தெரிவதில்லை. குழந்தையின்மைக்குக் காரணமாகும் கருக்குழாய் அடைப்பு பற்றி இப்பதிப்பில் காணலாம்..
கருக்குழாய்
கருக்குழாயின் மிக முக்கியமான செயல் கருத்தரித்தலுக்கு உதவுவது தான். இந்தக் கருக்குழாய்கள் சிலருக்கு இயற்கையிலேயே, அதாவது பிறவியிலேயே அரிதாக இல்லாமல் இருக்கலாம். அதாவது 10 ஆயிரத்தில் 5 பெண்கள் இப்படி இயற்கையிலேயே சினைக்குழாய் இல்லாமல் பிறக்கலாம்.
குழந்தை உருவாதல்
ஆணின் அணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒரு சிசுவை உண்டாக்கும் முக்கிய பாலம்தான் கருக்குழாய் எனப்படுகிற 2 சினைக்குழாய்களும். இது கர்ப்பப்பையின் இடது பக்கம், வலது பக்கம் என இரண்டு பக்கங்களிலும் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மெல்லிய குழாய்களாக இருக்கும்.
சினைக்குழாயின் ஒரு பக்கம், கர்ப்பப்பையினுள் திறந்த நிலையில் இருக்கும். மறு பக்கம் கருமுட்டைப்பையின் அருகில் இருக்கும். இவற்றில் கர்ப்பப்பையின் வாயில் உள்ள பகுதி குறுகலாகவும், கருமுட்டைப்பையின் அருகில் உள்ளது அகலமாக, கைவிரல் போன்ற திசுக்கள் கொண்ட, உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். கர்ப்பப்பையிலிருந்து உள்வரும் ஆண் அணுக்களை சினைக்குழாய் வழியாக கொண்டு சென்று, மாதாமாதம் வெடிக்கும் கருமுட்டையை கைவிரல் போன்ற மென்மையான ஃபிம்பிரியா (fimbriya) உறிஞ்சி, சினைக்குழாய்க்குள் எடுத்துக் கொள்கிறது.
சிலியா போன்ற மென்மையான, மிக சன்னமான மயிரிழைகள் இந்தச் செயலைச் செய்கின்றன. அப்படி உண்டாகும் சிசுவை 48 மணி நேரத்துக்குள் சினைக்குழாயிலிருந்து கர்ப்பப்பை அறைக்குள் சேர்த்து விடுகிறது. கரு, கர்ப்பப் பையில் ஒன்றி, குழந்தையாக வளர ஆரம்பிக்கிறது.
கருக்குழாய் அடைப்பு
குழந்தையின்மைக்கான பிரதான காரணம் இந்தக் கருக்குழாய் அடைப்பு என ஏநாம் பதிப்பின் முகப்பிலேயே அறிந்து கொண்டோம். அடுத்து கருக்குழாயில் கருத்தரிக்கும் சிசு, கருக்குழாயினுள் செல்ல இயலாமல், கருக்குழாயிலேயே தங்கி வளர்ச்சியடையவும் இது காரணமாகலாம். இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். குழந்தை இல்லாத பிரச்னைக்கு இந்த சினைக்குழாய்கள் வேலை செய்யாததுதான் முக்கிய காரணம்.
கருக்குழாயின் அடைப்புக்குக் காரணங்கள்
கருக்குழாய் நன்கு வேலை செய்வதை எப்படிக் கண்டுபிடிப்பது?
1. குழந்தையில்லாத தம்பதிக்குப் பரிந்துரைக்கப் படுகிற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்று, கருக்குழாய் அடைப்புக்கான சோதனை. ஸ்கேன், எக்ஸ் ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம்.
2. கருக்குழாயில் அடைப்பின்றி இருந்தாலும், சினைக்குழாய் செயல்திறன் இன்றி இருக்கலாம்.
3. சினைக்குழாயின் செயல்திறனைக் கண்டுபிடிக்கும் நவீன பரிசோதனை இப்போது பரவலாக வந்துள்ளது.
4. லேப்ராஸ்கோப்பி மூலம் மிகத் துல்லியமாக குழாயின் வெளிப்புறத் தோலையும், அதன் நிலையையும் (கருப்பையின் அருகில் உள்ளதா), கருப்பை, குடல் அல்லது சிறுநீர்ப் பையில் ஒட்டியிருக்கிறதா என நேரடியாக லேப்ராஸ்கோப்பி மூலம் கண்டறியலாம். அப்படி ஒட்டியிருந்தால் லேப்ராஸ்கோப்பி மூலம் (adhesiolysis) அகற்றவும் செய்யலாம்.
5. சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி (tuboplasty) எனப் பெயர். இப்போது ஃபாலோஸ்கோப்பி (falloscopy) என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற என்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள சிலியா (cilia) இயக்கத்தையும் (மைக்ரோ மயிரிழைகள்) கண்டறியலாம்.
பிரச்சனையை சரி செய்யும் வழிகள்..!!
எனவே ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெற்று, மகிழ்வாக மன நிறைவுடன் வாழலாம்..!