Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தையின் உயரத்தை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள்

அனைத்து பெற்றோர்களும் கவலைப்படும் ஒரு விஷயம் குழந்தைகளின் உயரம். நல்ல உயரத்துடன் இருப்பது குழந்தைகளுக்கு சமூகத்தில் நல்ல மரியாதையை பெற்றுத்தரும். இதனால் பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தையின் உயரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவார்கள். இந்த முயற்சிகளை காட்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உயரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வைட்டமின்களும், புரதச்சத்தும் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமைகளாகும். குழந்தைகளை உயரமாக்க கூடிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை இங்கு பார்க்கலாம்.

1 பால்

பால் கால்சியம் மற்றும் புரதசத்து நிறைந்த உணவாகும். இது எலும்புகளை பலப்படுத்துவதோடு உயரத்தை அதிகமாக்க தேவையான கால்சியத்தையும் வழங்குகிறது. மேலும், இரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதோடு உடலை வசீகரமாகவும் மாற்றும். இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.

2 உலர் பழங்கள்

உங்களுடைய செல்ல குழந்தையின் உயரத்தை அதிகரிக்க கொடுக்க வேண்டிய மற்றொரு முக்கியமான உணவு உலர் பழங்களாகும். குறிப்பாக குளிர்காலத்தில், இவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையை பலப்படுத்துவதோடு, ஹார்மோன் சுரப்பதையும் சீராக்ககிறது. ஆனால் இதனை அளவுக்கதிகமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுக்கும்போது அவர்கள் வயிற்று உபாதைகளுக்கு ஆளாகலாம்.

3 பழங்கள் மற்றும் காய்கறிகள்

அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் பின்பற்றமால் இருப்பதும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை தான். இவை அதிகளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதோடு குழந்தைகளின் மொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே குழந்தைகள் எவ்வளவுதான் காய்கறிகளை சாப்பிடாமல் அடம்பிடித்தாலும் அவர்களை கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைக்கவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

4 முட்டை

முட்டை முழுவதும் புரதம் நிறைந்ததாகும். அதுமட்டுமின்றி குழந்தையின் மூளைவளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி12-ம் நிறைந்துள்ளது. இது குழந்தையின் மொத்த வளர்ச்சியில் உதவுவதோடு, உயரத்தையும் அதிகரிக்கிறது. எனவே குழந்தைக்கு தேவையான அளவு முட்டையை அவர்கள் உணவில் சேர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

5 முழு தானியங்கள்

முழு தானியங்களை எந்த விதத்தில் எடுத்திக்கொண்டாலும் சத்துக்கள் வீணாகாது. குறிப்பாக குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சிலேனியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. தானியங்களான முழுகோதுமை, ராகி போன்றவை குழந்தைகளை உயரமாக்குவதோடு ஹார்மோன் கோளாறுகளையும் சரிசெய்கிறது.

6 தயிர்

இது வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த முக்கியமான மற்றும் சுவையான உணவாகும். இந்த இரண்டு சத்துக்களும் குழந்தையின் உயரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பால் சம்பந்தமான அனைத்து பொருட்களிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளை அவற்றை சாப்பிட உற்சாகப்படுத்துங்கள்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon