Link copied!
Sign in / Sign up
20
Shares

குழந்தையின் வளர்ச்சி அட்டவணை : குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

கருவில் உருவான உடனே உங்கள் குழந்தை மகிழ்ச்சியை கொடுக்க துவங்கி இருக்கும். குழந்தையின் பிறப்புக்குப் பின் முதல் சில ஆண்டுகளுக்கு, குழந்தை வளர்ச்சியின் ஒரு பகுதியாக பல உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படும். குழந்தைக்கு ஏற்படும் இந்த மாற்றங்கள் எந்த வயதில் ஏற்படும் என பல பெற்றோர்கள் அறிவதில்லை. அவற்றை அறிந்து கொள்வது பெற்றோரின் கடமை. குறிப்பிட்ட வயதில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இங்கு குழந்தைகளின் வளர்ச்சிகான அட்டவணையை பார்க்கலாம்.

குழந்தை வளர்ச்சியில் அளவிட வேண்டியவை…

1 குழந்தையின் எடை கிலோகிராமில்(Kg) : மின்னணு எடை அளவிட்டு இயந்திரத்தை பயன்படுத்தலாம். இது துல்லிய தன்மை கொண்டதாக இருக்கும்.

2 குழந்தையின் உயரம் சென்டிமீட்டரில்(CM) : பெற்றோர் குழந்தைகளை சுவற்றில் முதுகு சாய்ந்திருக்கும் படியும், கைகளை நேராகவும் வைத்து தலை இருக்கும் இடத்தில் குழந்தையின் உயரத்தை அளவிடுகிறார்கள். இதே போல் ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சியை அளவிட வேண்டும்.

3 குழந்தையின் வயது மாதங்களில் : குழந்தையின் வயதை மாதங்களில் எடுத்து கொள்ள வேண்டும்.

4 குழந்தையின் தலையின் சுற்றளவு சென்டிமீட்டரில்(CM) : இந்த சுற்றளவை நீங்கள் சாதாரண அளவீட்டு நாடாவிலேயே அளவிடலாம்.

5 BMI Kg/M2 -ல்

மேலே கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அளவிட்டு முறைகளையும் அறிந்திருப்பீர்கள். ஆனால், BMI -யை எப்படி அளவிட வேண்டும் என்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கும். BMI என்பது உயரம் மற்றும் எடையை ஒரே எண்ணால் குறிப்பிட்டு ஒப்பிட்டு பார்ப்பதாகும். உயரத்தை மீட்டரில் எடுத்து உடல் எடையை வகுக்க வேண்டும்.

உதாரணமாக, எடை 3 கிலோ மற்றும் உயரம் 49 செமீ எனில்

49 செமீ = 0.49 மீ

BMI = 3/0.492 = 12 Kg/M2

ஆண் குழந்தைகளுக்கு :

பெண் குழந்தைகளுக்கு :

இது உலக சுகாதார அமைப்பால் (WHO) வெளியிடப்பட்ட விளக்கப்படம் ஆகும். உங்கள் குழந்தையின் BMI குறிப்பிட்ட அளவிற்குள் இல்லை எனில் கவலையடைய தேவையில்லை. சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மூலம் குழந்தையை சரியான உடல் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon