Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தையின் தலை சிறிதாய் இருந்தால் என்ன செய்வார்கள்?

குழந்தைகள் வளரும்போது மிகவும் பாதுகாப்பாக கவனிக்க வேண்டியது அவர்கள் தலையை தான். அதேபோல், குழந்தை பிறந்த பின்னரும் தலையை சரியான வடிவத்தில் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமைகளுள் ஒன்று. இல்லையேல், குழந்தையின் தலை கோணல் மாணலாய் செல்ல, அது வழக்கத்தைவிட வித்தியாசமாக மற்றவர்களுக்கு தெரியக்கூடும்.

பிறப்பின் போதே ஒரு சில குழந்தைகளுக்கு இந்த குறைபாடு என்பது இருக்கும். இதை தான் மைக்ரோசிபாலி என்கின்றனர். அதாவது சிறிய தலை கொண்ட சிசு என அர்த்தமாகும். கருவில் இருக்கும் குழந்தையின் தலை வளர்ந்தால் மட்டுமே, மூளை வளர்ச்சி என்பதும் இருக்கும். மைக்ரோசிபாலியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மூளை வளர்ச்சி என்பதும் மிக குறைவு தான். கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையானது வளராமல் சென்றாலோ அல்லது குழந்தை பிறந்த பின்னும் வளராமல் இருந்தாலோ அதை மைக்ரோசிபாலி என நாம் அழைக்கிறோம்.

மைக்ரோசிபாலியால் ஏற்படக்கூடிய மற்ற பிரச்சனைகள்:

1. வலிப்பு தாக்கங்கள்

2. பேச்சில் மாற்றம் தெரிவது

3. அறிவார்ந்த இயலாமை

4. சமநிலையில் இருக்க முடியாமல் செல்லுதல்

4. உண்ணுவதில் பிரச்சனை

5. கேட்கும் திறன் குறைபாடு

6. கண் பார்வை குறைபாடு

இந்த பிரச்சனையை எப்படி கண்டுபிடிப்பது?
கர்ப்ப காலத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டால்:

இந்த பிரச்சனையை சிலசமயங்களில் அல்ட்ரா சவுண்ட் சோதனை கொண்டு கண்டுபிடித்திடலாம். கர்ப்பக்காலத்தில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்டால்... இரண்டாவது ஆறு மாதத்தின் கடைசியில் அல்லது மூன்றாவது முதல் மாதத்தின் தொடக்கத்தில் தான் அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்ய வேண்டும். டாக்டரின் பரிந்துரைப்படி மற்ற பிற சோதனைகள் கொண்டு கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை தெரிந்துக்கொள்ளலாம்.

குழந்தை பிறந்த பிறகு கண்டறிந்தால்:

குழந்தையின் தலை விட்டத்தை மருத்துவர்கள் பரிசோதிப்பர். சரியான வயதிற்கு சரியான அளவை, குழந்தையின் தலை பெறுகிறதா? என தொடர்ந்து கண்காணிப்பார்கள். 

சிகிச்சை:

இந்த குழந்தைகளின் தலை சிறிதாய் இருப்பதற்கு எந்த தீர்வும் இதுவரை கிடைக்கப்படவில்லை. மைக்ரோசிபாலி இருக்கும் குழந்தையை தொடர்ந்து பரிசோதிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பிரச்சனையால், எந்த வித புது பிரச்சனையும் வருமெனில்... உடனடியாக உங்கள் குழந்தையை டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியம். 

நவீனம் வளர்ந்து வரும் நம் வாழ்க்கையில் இந்த அவல நிலைக்கான தீர்வு நாளை கிடைத்தாலும், இதனால் முதலில் சந்தோசம் கொள்ளப்போவது இக்குழந்தைகளின் பெற்றோரே. காத்திருப்போம்... காரணத்திற்காக தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன்...   

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon