Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட 5 வழிகள்..!

உங்கள் வாழ்வில் புத்தொளியாய் வந்த புத்துயிர்.., உங்கள் குழந்தையே.. உங்கள் உலகம். சின்னஞ்சிறு தளிராய் உங்கள் கையில், தவழ்ந்த உங்கள் உயிர், மெதுவாய் வளர்ந்து, தரையில் தவழ்ந்து, இப்போது நடக்கத் தயார் அடைந்துவிட்டது; நீங்கள் உங்கள் உயிரை சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. 

குழந்தையின் முதல் பிறந்த நாள், உண்மையில், எல்லாப் பெற்றோருக்கும் மறக்க முடியாத நாள். குழந்தையோடு குழந்தையாக, பெற்றோரும் கற்று, வளர்ந்து வந்துள்ளனர். 'இப்படிப்பட்ட நாளை எப்படிக் கொண்டாடலாம்?' - என்பதற்கு நாங்கள் தரும் சில ஐடியாக்கள்..

1. பார்ட்டி..!

குழந்தைக்குப் பிடித்த வகையில், ஏதேனும் ஒரு கரு(theme) வைத்து, குழந்தையின் நண்பர்கள், உறவினர்களை அழைத்து பார்ட்டி வைத்து , பிறந்த நாளைக் கொண்டாடலாம்..!

2. பிடித்த இடம்..!

குழந்தையின் பிறந்த நாள் அன்று, குழந்தைக்கு பிடித்த இடங்களான, கடற்கரை, பூங்கா, வனவிலங்கு பூங்கா இவற்றிற்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கலாம். மேலும் அவ்விடங்களில் அனுமதி வாங்கி, கேக் வெட்டி, குழந்தையை மகிழ்ச்சியுறச்செய்யலாம்..

3. மாயாஜாலம்..!

குழந்தைக்கு மாயாஜாலம் போன்றவற்றில் விருப்பம் இருந்தால், வித்தை செய்பவரை அழைத்து, மாயாஜால வித்தைகளைக் காட்டி குழந்தைகளை மகிழ்வித்து, பிறந்த நாளைக் கொண்டாடலாம்..!

4. கை வேலைப்பாடுகள்..!

உங்கள் குழந்தைக்கு ஓவியம் வரைதல் அல்லது ஏதேனும் புதுவித பொருட்களை செய்வது போன்றவற்றில் விருப்பம் இருந்தால், குழந்தை தன் நண்பர்களுடன் இணைந்து, அத்தகைய செயல்களில், ஈடுபடுமாறு செய்து, மகிழ்வித்து பிறந்தநாளைக் கொண்டாடலாம். மேலும் மரக்கன்று நடுதல், சில சமூக சேவை புரிதல் போன்றவற்றில் ஈடுபடச் செய்யலாம்..!

5. நீச்சல் குளம்..!

குழந்தைக்கு நீச்சல் போன்ற விஷயங்களில் விருப்பம் இருந்தால், pool பார்ட்டி நடத்தலாம். குழந்தையின் நண்பர்கள் மற்றும் உறவுகளை அழைத்து, அவ்வித பார்ட்டி நடத்தி, குளித்து, கூத்தாடி, கொண்டாடி மகிழலாம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon