Link copied!
Sign in / Sign up
31
Shares

குழந்தையின் நிறம் தொடர்பான நிதர்சன உண்மை..!!

நண்பர்களே! நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் அல்லது இது உண்மை தானா என்று நாம் எண்ணிக் குழம்பும் ஒரு செய்தி..! அது தான், கர்ப்பகாலத்தில், குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற கருத்து. இந்த செய்தியின் தோற்றம், உண்மை நிலவரம், இது உண்மையா அல்லது பொய்யா என்பனவற்றை எல்லாம் நாம் இந்த பதிப்பில் படித்து அறியலாம்..! 

குங்குமப் பூ வரலாறு…!

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்களது கற்ப காலங்களில், காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து, தொடர்ந்து இரவு வேளையில் குடித்து வந்தால், பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும்.

இது இன்று நேற்றல்ல, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, குங்குமப்பூவை பயன்படுத்தி வருகிறார்கள், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

குங்குமப் பூ தோற்றம்…!

சாப்ரன் குரோக்கஸ் (Saffron Crocus) என்ற தாவரத்தின் பூவிலுள்ள சூலக தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவை, தனியே பிரிக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கித்தான் குங்குமபூவை தயாரிக்கிறார்கள். இதனுடன் வேறு எந்த பொருளும் சேர்க்க படுவதில்லை.

மகத்துவம்..

தூய்மையான குங்குமபூ, செம்மை கலந்த சிவப்பு நிறம் கொண்டது. இதனை, காய்ச்சிய பாலில் கலக்கும் போது, கலக்கப்பட்ட பால் தங்க நிறத்தை அடைகிறது. ஒரு கிராம் குங்குமபூ தயாரிக்க, சுமார் நூற்றி ஐம்பது பூவிலிருந்து, நூற்றி எழுபத்தைந்து வரையிலான சாப்ரன் குரோக்கஸ் பூக்கள் தேவைப்படும், ஆகையால்தான் நறுமண பொருட்களில் குங்குமபூ காலம் காலமாக விளையுயர்ந்த பொருளாக உள்ளது.

குழந்தையம் குங்குமப் பூவும்..!

உண்மையில் குங்குமப்பூவை கர்ப்பிணிகள் பயன்படுத்தி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்றால், அதில் துளி கூட உண்மையில்லை என்பதே உண்மை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

குழந்தை சிவப்பாக பிறப்பதும், கருப்பாக பிறப்பதும் நமது பரம்பரையினர்களின் ஜீன்கள் சம்மத்தப்பட்ட விஷயம் தானே தவிர, இதில் குங்குமபூவிற்கு எந்த பங்கும் இல்லை, ஆனால், இதனை காட்டிலும் பல எண்ணற்ற பயன்களை கர்ப்பிணிப்பெண்களுக்கு தரக்கூடியது குங்குமபூ.

பிரசவமம் குங்குமப்பூவும்..!

கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இதனை வெற்றிலையுடன் கலந்து தின்றாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி இன்றியும் குழந்தை பிறக்கும் என்பர். மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது. இதயத்தை பலப்படுத்த உதவும் அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.

இதர பயன்கள்..

குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும். ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு, போன்ற பயன்கள் உண்டு. இதை முகப்பூச்சாக பயன்படுத்தி, அழகான முகத்தோற்றம் பெறலாம்.

குங்குமப் பூவின் தன்மை..!

அசல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.

போலி: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon