Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தையின் முதல் ஸ்டேஷனரியில் இருக்க வேண்டிய 4 பொருட்கள்

உங்கள் குழந்தை என்று வரும் போது, அவருக்கு எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பீர்கள். அதிலும் முதல் முறை அவர்கள் ஏதாவது செய்கிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் பேசிய முதல் வார்த்தை, அவர்களின் முதல் நடை, அவர்கள் பாடிய முதல் பாட்டு, முதல் முறை பள்ளிக்கு செல்லுதல், முதல் உணவு என அனைத்தும் ஒரு பெற்றோராக உங்களுக்கு கிடைக்கும் முதல் அனுபவம். அதுவும் முதல் முறை என்பது மிகவும் சிறப்பான மற்றும் முக்கியமான நிகழ்வாகும். எனவே, உங்கள் குழந்தையின் முதல் ஸ்டேஷனரியில் இருக்க கூடிய பொருட்கள் அவர்களுக்கு பயனுள்ளதாகவும், அதே சமயம் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களால் இயக்கப்படும் இன்றைய அவசர உலகத்தில், எல்லோரும் தங்கள் குழந்தைகளின் முதல் நினைவுகளை காட்சிப்படுத்த முனைகின்றனர். எல்லாவற்றையும் போல முதல் பென்சில், க்ரேயான், மற்றும் ரப்பர் ஆகியவையும் சரியாக இருப்பது மிகவும் அவசியம். எனவே, முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் உங்கள் குழந்தைக்கு தேவைப்படும் பொருட்களை இங்கு பார்ப்போம்.

1 ரப்பர்

குழந்தைகள் மிகவும் அப்பாவிகள். அவர்களுக்கு உலக விதிமுறைகள் எல்லாம் தெரியாது. அதனால் தான் என்னவோ, ஒரு பென்சிலோ அல்லது ஒரு க்ரேயானோ கிடைத்துவிட்டால், நோட்டிலிருந்து வீடு வரை அனைத்திலும் கிறுக்கி வைத்துவிடுவார்கள். எனவே, அவர்களுக்கு ரப்பர் கொண்டு பென்சில் மற்றும் க்ரேயான் கிறுக்கல்களை எப்படி அழிப்பது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். மேலும், அந்த கிறுக்கல்களில் இருந்தே எப்படி படங்கள் வரைய வேண்டும் என்பதையும் சொல்லி கொடுக்கலாம். இது ஒரு சலிப்பான வேலையாக தோன்றலாம். இந்த கிறுக்கல்களை அழிப்பதையும் வேடிக்கையாக மாற்றலாம். வித விதமான வண்ணங்களில், வடிவங்களில் இருக்கும் ரப்பர்களை வாங்கி கொடுத்தால், குழந்தைகள் அவர் என்ன நிறங்கள், வடிவங்கள் என்பதை கற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பாடம் எடுத்தது போலவும் இருக்கும்.

2 வண்ணங்கள்

நாம் சிறு குழந்தைகளாக இருந்த போது வண்ணங்களின் மேல் பெரும் ஆவல் கொண்டிருந்தோம். இதனாலேயே, பால்வாடி பள்ளிகளில் குழந்தைகளின் படைப்பு திறமைகளை வெளிக்கொண்டு வர, வெவ்வேறு வண்ண சுண்ணாம்பு கட்டிகளையும் க்ரேயான்களையும் குழந்தைகள் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஒரு வண்ண பென்சிலையோ அல்லது க்ரேயான்களில் குழந்தை எந்த நிறத்தை முதலில் எடுக்கிறதோ அதை வைத்து குழந்தையின் மனநிலை மற்றும் குணாதிசயங்களை சொல்லலாம். எனவே, படிப்பின் முதல் படியாக அவர்களை பல வண்ணங்களை உபயோகப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். நிறங்கள் எப்பொழுதும் உங்கள் நாளையும் உங்கள் குழந்தையின் நாளையும் மகிழ்ச்சியாக மாற்றும்.

3 பென்சில் பாக்ஸ்

பொருட்களை போட்டு வைக்க குழந்தைகளுக்கு கண்டிப்பாக பென்சில் பாக்ஸ் தேவை. இந்த பாக்ஸ்கல் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மேலும் பைகள் ( pouches ) என்றால் மென்மையாக இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். விலங்கு வடிவ பைகள் / பாக்ஸ்கள் அந்த விலங்குகள் பற்றி தகவலை உங்கள் குழந்தைக்கு கொடுக்கும். இந்த பைகள் தண்ணீர் உட்புகாதவாறு இருக்கும். மேலும், வலுவானதாக இருக்கும். வெவ்வேறு கார்ட்டூன் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு கூட குழந்தைக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

4 வண்ணம் தீட்டும் புத்தகங்கள்

இது உங்கள் குழந்தைக்கு வெவ்வேறு வகையான விலங்குகள், பழங்கள், காய்கறிகள், வடிவங்கள் ஆகியவற்றை கற்றுக்கொடுக்க ஒரு எளிய வழியாகும். இந்த புத்தகங்கள் குழந்தைகளுக்கு எங்கே வண்ணம் தீட்ட வேண்டும், எந்த வடிவத்தில் தீட்ட வேண்டும் போன்ற ஒரு புரிதலை கொடுக்கவும். மேலும், இந்த புத்தகங்கள், உங்கள் குழந்தையின் வரையும் திறனையும் அதிகரிக்கும்.

மற்ற விஷயங்களை போல், உங்கள் குழந்தையின் முதல் ஸ்டேஷனரியும் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் எதிர்காலத்தை வரையறுக்க உதவுகிறது. அவர் வாழ்வின் ஒரு முக்கிய சின்னமாக கூட மாறலாம். குழந்தைகளின் உலகத்தை, நிறங்கள் மற்றும் வடிவங்களுடன் பிரகாசப்படுத்துவது பெற்றோரின் கடமையாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon