Link copied!
Sign in / Sign up
15
Shares

குழந்தையின் மனநல வளர்ச்சி:முதல் 6 மாதங்களில்..!

குழந்தைகள் பிறந்தது முதலான சில வருடங்களில் தான், அனைத்து வகை உடலியல் மற்றும் மனநல வளர்ச்சிகளும் நிகழும். இவ்வளர்ச்சிகளில் முக்கியமாக மூளை மற்றும் தலையினுள் உள்ள பாகங்களின் வளர்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை குழந்தையின் முதல் 6 மாதங்களில் வளரத் தொடங்கும். முதல் 6 மாதங்களில், குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறத்தையும், தன்னைச் சுற்றி எழும் சப்தங்களையும் கிரகிக்க முயல்வர்; மூளையின் வளர்ச்சியும் இக்காலகட்டத்தில் நிகழ்வதால், குழந்தை முதலில் காணும் விஷயங்கள் அவர்களின் நினைவில் நீங்கா இடம் பெறுகின்றன.  

குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரையிலான மனநல வளர்ச்சி பற்றி இப்பதிப்பில் படித்து அறியலாம்..!

முதல் 2 மாதங்கள்..!!

முதல் மாதம் தொடங்கி இரண்டாம் மாதம் வரையிலான காலகட்டத்தில், குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள சூழலையும், பொருட்களையும், தாய் மற்றும் தந்தையின் முகங்களையும் காணத் தொடங்குவர்; இக்காலத்தில், குழந்தைகள் அன்னையின் முகம், தொடுதல், வாசம், உணர்வு, அன்பு, அரவணைப்பு என அனைத்தையும் உணரத் தொடங்குவர். குழந்தைகள் தங்கள் தலையை நிலைப்படுத்த முயல்வர். நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட பொருட்களைக் கூர்ந்து கவனிப்பர், ஆனால், அவர்களின் கண் பார்வை இன்னும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்காது; அப்பொருட்கள் தங்கள் பார்வையை விட்டு மறைந்தால், அது அவர்களின் நினைவிலும் இல்லது போய்விடும்; குழந்தைகளுக்கு அதைக்குறித்த நினைவு இருக்காது.

மூன்றாம் மாதத்தில்..!

இக்காலகட்டத்தில், குழந்தைகள் தங்கள் கை மற்றும் கால்களை அசைத்து, காற்றோடு கதை பேசத் தொடங்குவர்.

நான்காம் மாதத்தில்..!!

குழந்தைகள் தங்களின் நான்காம் மாத வயதில், பொருட்களைக் கையில் பிடிக்க முயல்வர்; தான் இருக்கும் இடத்தில் இருந்து பொருட்கள் இருக்கும் இடத்திற்கு நகரத் தொடங்குவர்; அதற்கு முயற்சிப்பர். குழந்தைகள் பெற்றோரின் கைகளை பற்றத் தொடங்குவர். குழந்தைகள் தங்கள் உடலுறுப்புகளை அறியத் தொடங்குவர்; தங்களைப் பற்றி அறிய முயல்வர்; தன்னைத் தானே உணர முயற்சிப்பர். குழந்தைகளின் பார்வை மேம்படும்; அவர்கள் பார்க்கும் பொருட்களை பற்றியும், அதன் வடிவம், நிறம் போன்றவற்றை அறியவும், நினைவில் கொள்ளவும் முயல்வர்.

5 மற்றும் 6 மாதங்களில்..!

இந்த மாதங்களில், குழந்தைகள் சத்தமிட்டு பேச முயல்வர்; ஏதேனும் சத்தங்களை உண்டு பண்ணிக் கொண்டிருப்பர். பெற்றோரைத் தவிர்த்து, மற்றவர்களின் முகம், வாசனை, அன்பு, அரவணைப்பு, குரல்கள் போன்றவற்றை உணர முயல்வர்.

குழந்தைகளின் மனநல வளர்ச்சி படிப்படியாக நிகழும். குழந்தை பிறந்த முதல் சில வருடங்கள் மிக முக்கியமானவை. ஆதலால், இக்கால கட்டத்தில், குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவுகளையும், ஆரோக்கியமான பழக்கங்களையும் வழக்கமாக்க முயலுங்கள். பதிப்பு பயனுள்ளதாக இருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள்..

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon