Link copied!
Sign in / Sign up
64
Shares

குழந்தையின் குறும்புத்தனத்தைத் தடுக்க 6 வழிகள்..!

நீங்கள் பெற்றோராக மாறும் போது, பல பொறுப்புகளுடன் குழந்தையின் குறும்புத்தனத்தையும் ஏற்று, அவர்களுக்கு நல்லறிவு புகட்டும் பெற்றோராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்...!
 
குழந்தைகள் குறும்பு புரியும் போது, சில பெற்றோர்கள் திட்டுவார்கள், சிலர் அறிவுரை கூறுவர், சிலரோ.., அடி பின்னிவிடுவர்! ஆனால், இவ்வாறு நீங்கள் கோபம் கொள்ளும் போது, அது குழந்தையின் மன நிலையில் சில மாறுதல்களை ஏற்படுத்தவும், உங்கள் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது.
 
ஆகையால் உங்கள் கோபத்தைக் குறைத்து, குழந்தையின் குறும்புத்தனத்தை மாற்ற இதோ சில வழிகள்..!!!! 
 
1. வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்..!
 
குழந்தைகள் ஒரு வீட்டை விட்டு இன்னொரு வீட்டிற்கு மாறுகையில், பள்ளி மாறுகையில் அல்லது புதிதாய் ஓர் உடன்பிறப்பு தோன்றுகையில், தன்னுடைய நண்பர்களை, தன்னுடைய முக்கியத்துவத்தை இழப்பதாய் எண்ணி தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றனர்.
 
இது மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு, நீங்கள் குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுவது ஒன்றே! "இந்த வீட்டிலும் முன்பு போல் அனைத்தும் அமைக்கப்படும், இந்த பள்ளியிலும் உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்; ஆதலால், உன் நட்பு வட்டம் பெரிதாகும், உன் உடன்பிறப்பு உனக்கு உறுதுணையாய் இருப்பான்"- என்று குழந்தைக்கு எடுத்துக் கூறுங்கள்...!
 
2. பொழுது போகவில்லை (போர் அடிக்கிறது)..!
 
 
இன்றைய சூழலில் குழந்தைகளின் மிகப்பெரிய புலம்பல் பொழுது போகவில்லை.. இந்த புலம்பலை உங்களிடம் முறையிடும் போது, பெரும்பாலான பெற்றோர்கள் கையில் ஒரு அலைபேசியைக் கொடுத்து அமைதிபடுத்திவிடுகிறீர்! ஆனால், அதுவும் அலுத்துப்போகையில், குழந்தைகளின் குறும்பு தலை காட்டுகிறது.
 
துள்ளித் திரியும் வயதில் அவர்களின் ஆற்றலுக்கு அணைபோடுவதில் நியாயமில்லை, ஆகையால் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாட்டு, நாட்டிய, இசைக்கருவி வகுப்புகளுக்கோ, விளையாட்டு பயிற்சிக்கோ அல்லது வெளியில் கடைகள், பூங்கா இவற்றிற்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்வியுங்கள்..!!
 
3. ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம்..!
 
குழந்தைகள், அவர்களை, அவர்கள் வரைந்த ஓவியங்கள் அல்லது அவரது செயல்களை, நீங்கள் கவனித்து பாராட்ட வேண்டும் என்று எண்ணி உங்களிடம் காட்டும் போது, "நீங்கள் இப்பொழுது அப்பா பிஸி பிறகு காட்டு என்றோ அல்லது குழந்தையின் புதிய உடன்பிறப்பை கவனித்து, மூத்த குழந்தையின் செயலைப் பாராட்ட தவறும் போதோ", ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் எழுகிறது.
 
ஆகையால், அவர்களின் தாழ்வு மனப்பான்மை, உங்களை எரிச்சல்படுத்தும் குறும்பாக மாறுகிறது. அதனால், குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் மற்றும் வீட்டில் எத்தனை குழந்தைகள் இருப்பினும் பாரபட்சம் காட்டாதீர்.
 
4. அதீத ஆர்வம்! அதீத உற்சாகம்!
 
 
குழந்தைகள் சில சமயம், அதாவது பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா செல்கையில், ஏதேனும் உற்சவத்தின் போது, அதிக உற்சாகமுடனும் ஆர்வத்துடனும் காணப்படுவர்; அப்பொழுது அவர்கள் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தி விடுவர்.
பெற்றோர்கள் குழந்தையின் உற்சாக வெள்ளத்திற்கு தடையாக இல்லாது அணையாக இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும்.
 
5. மற்ற குழந்தைகளின் தூண்டுதல்..!
 
பொதுவாக, குழந்தைகள் தம் நண்பர்களோடு சேரும் போது, அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை..! நண்பர்களின் தூண்டுதலால், சில சமயம் குழந்தைகளின் குறும்பு எல்லை மீறுவதுண்டு; ஆனால், பெற்றோர் அவற்றை பொறுத்து, குழந்தைகளுக்கு புத்தி புகட்ட வேண்டும்.
 
6. முடியாது என்ற முடிவு..!
 
குழந்தைகள் ஏதேனும் செயல்களில் ஈடுபடும் போதோ, படிப்பிலோ, விளையாட்டிலோ ஒரு முறை தோற்றுவிட்டால், அவர்கள் விரைவில் தங்கள் நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர், இல்லையேல் முடியாது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.
 
அவ்வாறு, அவர்கள் துவண்டுவிடும் போது, பெற்றோர்கள் வசைபாடாது, அன்பால் அரவணைத்து, ஊக்கமளிக்க வேண்டும்; முடியாது என்ற வார்த்தையை, குழந்தைகள் அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.
 
 
குழந்தைகளைப் புரிந்து கொள்ள, பெற்றோரே! நீங்களும் குழந்தையாக மாறி, அவர்கள் இடத்திலிருந்து யோசித்து நடந்தால்.., உங்கள் குடும்பமும் ஆனந்தக் காற்று வீசும், ஒரு அழகிய மலர்த்தோட்டமாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..!
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon