Link copied!
Sign in / Sign up
25
Shares

குழந்தையை மார்பகத்தில் தூங்க வைப்பதில் இவ்வளவு இருக்கிறதா?

குழந்தையை மார்பகத்தின் மேல் ஒரு சில பெற்றோர் தூங்க வைப்பார்கள். இதனால் என்னவெல்லாம் கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? குழந்தைகளை உங்கள் மார்பகத்தில் தூங்க வைப்பதால் மன நிம்மதி கிடைத்தாலும், நாளடைவில் மூச்சு திணறல் எனும் பிரச்சனையானது விஸ்வருபம் எடுக்கக்கூடும்.   

தாலாட்டின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு அறக்கட்டளை குழந்தைகள் தூங்கும் விஷயத்தில் பெற்றோர்களின் பங்கு என்பது மிகவும் முக்கியம் என கூறியிருக்கிறது. உங்கள் குழந்தையை நீங்கள் சோஃபா அல்லது சாய்வு நாற்காலியில் தூங்க வைப்பதால் 50 மடங்கு ஆபத்து எனவும் சொல்கிறது.

ஒரு ஆய்வின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தோராயமாக ஆறில் ஒரு பங்கு குழந்தைகளின் உயிருக்கு சோஃபாவால் ஆபத்து என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சோஃபா மற்றும் சாய்வு நாற்காலியில் குழந்தைகளை தூங்க வைப்பதால் மூச்சு திணறல் என்பது மிகவும் எளிதாக உங்கள் குழந்தைகளுக்கு வரக்கூடும்.

நீங்கள் தாய்ப்பால் தரும் ஒருவராக இருந்தால்... தாய்ப்பால் தரும் நிலையை குழந்தைகளுக்கு ஏற்றதாக அமைத்துத்தர வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், குழந்தைகள் தாய்ப்பால் அருந்தியபடியே தூங்கிவிடுவர். அப்படி இருக்க... குழந்தைகளுக்கு ஏற்ற நிலையில் அவர்களை அமர்த்தி தாய்ப்பால் தருவது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் தவிர்க்கும். தாய்ப்பால் தரும் தாய்மார்கள் அப்படியே தூங்கிவிடாமல் இருத்தல் வேண்டும்.

அதேபோல் தாய், தந்தை இருவரும் குழந்தைகள் அருகில் படுப்பதில் கவனம் வேண்டும். குறிப்பாக, புகைப்பிடித்து விட்டு அல்லது மது அருந்திவிட்டு குழந்தையின் அருகில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏன் குழந்தைகளை மார்பகத்தில் தூங்க வைக்கக்கூடாது?

1. குழந்தைகள் உங்கள் மார்பிலிருந்து கீழே விழ, அவர்கள் பிடியானது தளர்வடையலாம்.

2. குழந்தைகள் உங்கள் மேலே படுத்து தூங்குவதால் அதிக வெப்பமானது அவர்கள் மேல் படக்கூடும்.

3. நீங்கள் மூச்சு விடும்போது அவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

4. இதனால் மூச்சு திணறல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

எப்படி தடுப்பது?

1. சம கட்டிலில் குழந்தையை தூங்க வைக்கலாம். அதன் பரப்புகள் தளர்வடையாமல் இருத்தல் அவசியம்.

2. குழந்தைகள் பெற்றோருடன் தூங்கினாலும் குழந்தையை தனியாக தூங்க வைப்பது நல்லது. அவர்கள் பாதுகாப்பு என்பது குறைந்தது 1 வருடத்திற்கு அவசியமாகிறது.

3. குழந்தைகளிடம் மிருதுவான தலையணை, பஞ்சு பொம்மைகள் கொடுப்பதை தூங்கும் போது தவிர்த்திடுங்கள்.

4. புகை, கார்பன் மோனாக்சைடு போன்றவை மூச்சு திணறலை ஏற்படுத்தும். அவற்றை உங்கள் குழந்தைகளின் அருகில் உணராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளின் அருகாமையில் அவசர ஒலி எழுப்பியை வைப்பதை தவிர்த்திடுங்கள். 

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon