Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தையை குலுக்கினால், என்ன ஆகும்??

 

Video Credits:Hashem Al-Ghaili Facebook

என் இனிய பெற்றோர்களே! நீங்கள் ஆசை ஆசையாய் கர்ப்பம் தரித்து, கருவறையில் காத்து, தவமாய் 10 மாதங்கள் தவமிருந்து, மரண வாசல் காட்டும் பிரசவ வலியை வென்று பெற்ற வெற்றிக் குழந்தையை நீங்கள் சரியாக தான் பராமரிக்கிறீர்களா? குழந்தையை கொஞ்சும் ஆர்வத்தில், அதனை சிரிக்க வைக்கும் வேகத்தில், அந்த சிரிப்பில் நீங்கள் அடையும் ஆனந்தத்திற்காக குழந்தையை குலுக்கி, மேலே தூக்கி எரிந்து பிடித்து என ஏதேதோ முயல்கின்றீர். 

ஆனால், நீங்கள் விளையாட்டாக குழந்தையை குலுக்கி விளையாடுவது, குழந்தைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் அறிவீரா? குழந்தையை குலுக்குவதால், அதன் மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல், மூளை செல்கள் செத்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் குழந்தையை நீங்கள் ஒருவித விசையுடன் குலுக்குகையில், நிலையில்லாத, சரியாக நிலை பெறாத மூளை, மண்டை ஓட்டினுள் முன்னும் பின்னும் நகர்ந்து, ஓட்டினுள் இடித்து அங்கே, சிராய்ப்புகள், இரத்தக்கசிவு, வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதனால், குழந்தைக்கு நிரந்தர மூளை பாதிப்பு அல்லது மூளைச்சாவு ஏற்படலாம்; மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, தற்காலிக அல்லது நிரந்தர பார்வைக்குறைபாடு, பெருமூளை வாதம், வலிப்பு நோய் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி, இந்த பிரச்சனையால், தடைபட்டு வளர்ச்சி தாமதமாதல், கற்றல் குறைபாடு, குணம் மாறுபடுதல், போன்றவை ஏற்படலாம்..!

ஆகையால், பெற்றோர்களே! நம் விளையாட்டின் வினை அறிந்து, நம் செயல்களால், குழந்தைக்கு தீய வினை ஏதும் ஏற்படாமல் தடுத்து, அன்புக் குழந்தைக்கு அதிக அன்பை அளித்து, ஆரோக்கியமுடன் பாதிப்புகளின்றி வளர்த்தெடுக்க முயல்வோமாக..!! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon