Link copied!
Sign in / Sign up
28
Shares

குழந்தைப்பேறு தள்ளிப்போகும் பெண்களுக்காக சில தகவல்கள்..!

 
குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் நபரா நீங்கள்..?? இதோ உங்களுக்காக சில தகவல்கள்..
 
பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் (Polycystic Ovary Syndrom) முதல் காரணம்; இதை தடுக்க ரத்த இன்சுலின் அளவைக் குறைக்க வேண்டும். மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது; கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது.
 
 
‘பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான். இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்னையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.
 
மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது,(Polycystic Ovary Syndrom) பிரச்னையைப் போக்க உதவும்.
 
 
கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு,`அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும்.
 
 
குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 
குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon