Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தைப் பொருட்களில் ஒளிந்திருக்கும் 5 விஷ விஷயங்கள்..!!

இன்றைய கால குழந்தைகளுக்கு நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் அதிக நச்சுத்தன்மை கொண்டதாகவும், பல விஷ பொருட்கள் நிரம்பியதாகவும் உள்ளன; ஆனால், இவற்றையெல்லாம் அறியாது கண்ணைக் கவரும் விளம்பரங்களை நம்பி, இவை நல்ல பொருட்கள் என எண்ணி குழந்தைக்கு அளிக்கிறோம்..! இவ்வாறு விளம்பரங்களை நம்பத்தொடங்கிவிட்டதால், நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தை கைக்கொள்ள மறந்து, செயற்கை பொருட்களின் மோகத்தில் மூழ்கி திளைக்கத்தொடங்கி விட்டோம்..! 

இனியாவது விழித்துக் கொள்வோம் பெற்றோர்களே! இந்த பதிப்பைப் படித்து, குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒளிந்திருக்கும் விஷ விஷயங்களை பற்றி அறிந்து கொள்வோம்..! இனி தீர யோசித்து பயன்படுத்துவோமாக..!!

குழந்தைக்கு உபயோகிக்கும் ஷாம்பு..!

இந்த ஷாம்பூக்களில் அதிக முறையையும், மனதையும் தருவதற்காக பற்பல வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன; இதனால், குழந்தைகளுக்கு பிற்காலத்தில் தோல் நோய்கள், ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகையால் பெற்றோரே! அதிக மணத்தை தரும் ஷாம்புக்களை வாங்கி, குழந்தைக்கு அதிக நோய்களை தந்துவிடாதீர்கள்..! மனம் குறைந்த ஷாம்புவினை வாங்க முயலுங்கள் அல்லது இயற்கை முறையிலான ஷாம்புவினை வாங்கி பயன்படுத்துங்கள்..!

குழந்தைக்கான லோஷன்..!

இவற்றில் விட்டமின்கள் இருப்பதாக கூறி விற்கிறார்கள், உண்மையில் இதில் a.k.a retinyl palmitate எனப்படும் சிந்தடிக் விட்டமின் தான் உள்ளது; நீங்கள் குழந்தைக்கு இதை தடவி, குழந்தையின் உடலில் அதிக சூரிய ஒளி, அதிக தடவை பட்டால், குழந்தைக்கு தோல் சார்ந்த கட்டிகள் உருவாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது..! ஆகவே, கவனமாக இருங்கள் பெற்றோர்களே! பார்த்து வாங்குங்கள்.. தேங்காய் எண்ணெய்யை விட சிறந்த லோஷன் இருக்க முடியுமா என்ன?!

குழந்தைக்கு பூசும் பவுடர்..

குழந்தையை குளிப்பாட்டிய பின் அதனை பவுடரில் குளிக்க வைப்பர், பெற்றோர்; உண்மையில் இந்த பவுடர் குழந்தையின் உடலில் இருந்து ஈரத்தன்மையை முற்றிலுமாக உறிஞ்சி, வறட்சியை உண்டாக்கி, மிருதுத்தன்மையை தருகிறது; இதற்கு காரணமான வேதிப்பொருள் Talc எனப்படுவதாகும். இந்த வேதிப்பொருள் நுரையீரலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, புற்றுநோயையும் உண்டாக்கும் தன்மை கொண்டது. ஆகையால், இவ்வித பொருட்கள் வாங்குகையில் சற்று கவனித்து வாங்குங்கள் பெற்றோரே!

குழந்தையை துடைக்க உதவும் துணி (wipes)!!

propylene glycol எனும் வேதிப்பொருள் இந்த துணி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது; இது மூச்சுக்குழல் தொடர்பான நோய்கள் மற்றும் தோலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஆகையால், இதனை தவிர்த்து, சாதாரண நீர், காட்டன் துணியை பயன்படுத்தினாலே போதுமானது..!

குழந்தையின் டயப்பர்..!

VOC, dioxins, polyurethane, adhesives, lotions, inks, fragrance, and pesticide இத்தனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டே குழந்தைக்கான டயப்பர் தயாரிக்கப்படுகிறது. இது குழந்தைக்கு பிறப்புறுப்பில் பல நோய்களை ஏற்படுத்தலாம்; மேலும் டயப்பர் பயன்பாட்டால், குழந்தையின் நடையில் மாற்றங்கள் ஏற்படலாம்..!

ஆகையால், பெற்றோரே! ஆடம்பரத்தை எதிர்பார்த்து, குழந்தையின் உயிரை எடுத்துவிடாதீர்கள்; மேலும் எவ்வளவுக்கெவ்வளவு எளிமையான வாழ்க்கையை மேற்கொள்கிறோமோ, அத்தனை அளவு செலவுகள், நோய்கள், வருத்தங்கள், மன அழுத்தங்கள் எல்லாம் குறைந்து மாயமாகும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon