Link copied!
Sign in / Sign up
15
Shares

குழந்தைக்கு எத்தனை முறைக்கு ஒரு முறை பாலூட்டலாம்?

பிறந்த குழந்தையின் உணவு பழக்கங்கள் குறித்து பெற்றோர்கள் கவலைப்படுவது என்பது இயல்பான ஒன்றே. பல வேளைகளில், உங்கள் குழந்தைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பால் கொடுப்பது போல் உணர்வு ஏற்படும். இந்த குழப்பங்களை தடுக்க, ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒரு பொது அட்டவணையை கொடுத்துள்ளோம்.

முதல் மாதம்

முதல் நாளில், உங்கள் குழந்தை இரண்டு முறை தான் பால் குடிக்கும். எனினும், ஒரு வாரத்திற்குள் குழந்தை பால் குடிக்கும் வேளைகள் அதிகரித்து விடும். ஒரு நாளைக்கு சராசரியாக 8 முறை பால் குடிப்பார்கள். அதாவது 60 -120 மிலி. புதிதாய் பிறந்த குழந்தைகள் பால் குடிக்க 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், போக போக 15-20 நிமிடங்களில் குடித்து முடித்து விடுவார்கள். முதல் மாதத்தில், குழந்தைக்கு எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது பால் கொடுப்பதே சிறந்தது.

குழந்தை பசியில் இருக்கிறதா என்று எப்படி அறிவது? குழந்தைகள் பசி எடுக்கும் போது சில அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். பால் சப்புவது போல் செய்தல், தலையை இருபக்கமும் ஆட்டுவது, நீண்ட நேரம் பசியுடன் இருந்தால் அழுவது போன்ற குறிப்புகளை வெளிப்படுத்துவார்கள். குழந்தைகள் எவ்வளவு அதிகமாக பால் குடிக்கிறார்களோ, அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் பால் சுரக்கும். குறிப்பாக, குழந்தைகள் இரவில் அதிகளவு பால் குடிப்பார்கள்.

குழந்தைகளின் எடை குறைந்தால், அதற்கு போதிய உணவில்லை என்ற அர்த்தம் இல்லை. இது இயற்கையான ஒன்று தான். குழந்தை பிறந்து ஓரிரு நாளில் 10% வரை அதன் எடை குறையும். ஆனால், சிறிது நாட்களில் எடை கூட ஆரம்பித்து விடும்.

1-4 மாதங்கள்

இந்த மாதத்தில், குழந்தைகள் பொதுவாக 2-3 மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் குடிப்பார்கள். அதாவது தினமும் 120-210மிலி பால் குடிப்பார்கள். இது தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தான் பொருந்தும். மாற்று பால் குடிக்கும் குழந்தைகள், 1-3 மாதங்களில் 2-3 மணி நேரங்களுக்கு ஒரு முறை சராசரியாக 120-150மிலி பால் குடிப்பார்கள்; 3-4 மாதங்களில் 2.5-3.5 மணி நேரங்களுக்கு ஒரு முறை சராசரியாக 150-210மிலி பால் குடிப்பார்கள். இந்த மாதங்களில், குழந்தைக்கு திரவ உணவுகள் கொடுக்க கூடாது. ஏனெனில், அப்போது குழந்தைகளின் வாய் மற்றும் தொண்டை தசைகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்காது.

4-6 மாதங்கள்

6 மாதங்கள் ஆன பிறகு உங்கள் குழந்தைகள் சுமார் 1 லிட்டர் பால் குடிப்பார்கள். இந்த நேரத்தில் தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு திரவ உணவு கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். திரவ உணவு கொடுப்பதால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றில்லை. மசித்த உணவுகளை தினமும் 1-2 வேளைகள் கொடுக்க ஆரம்பியுங்கள். இது உங்கள் குழந்தைகள் சாப்பிடும் அளவை பொறுத்து கொடுக்கலாம். குழந்தை போதுமான அளவு சாப்பிட்டு விட்டால், அதற்கு மேல், உணவை துப்ப துவங்குவார்கள் அல்லது சாப்பிட மறுத்து தலையை ஆட்டுவார்கள் அல்லது உணவு சாப்பிடுவதற்கு வாயை திறக்க மாட்டார்கள். பொதுவாக சுமார் 1-3 கரண்டி உணவு வரை இப்படி செய்தால் அவர்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டார்கள் என்று அர்த்தம். தாய்ப்பாலை 2-4 மணி நேரங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

6-8 மாதங்கள்

இந்த நேரத்தில், பாட்டில் பால் கொடுக்க ஆரம்பித்துவிட வேண்டும். அதே போல், தினமும் மசித்த உணவுகளை 2-3 வேளைகள் கொடுக்க வேண்டும். சுமார் 4-8 கரண்டி உணவு போதுமானது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை கொடுக்கலாம். தாய்ப்பால் அல்லது பாட்டில் பாலை 3-4 மணி நேரங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

8-10 மாதங்கள்

இந்த நேரத்தில், புரதம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை உணவை கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் எவ்வளவு சாப்பிடுவார்களோ அந்த அளவு உணவு கொடுக்கலாம். இந்நேரத்திற்கு அவர்கள் பசியாறினார்களா என்பதை உங்களால் சொல்ல இயலும்.

10-12 மாதங்கள்

உங்கள் குழந்தைக்கு மூன்று வேளை உணவு கொடுப்பதை தொடருங்கள். அதே சமயம், 4-5 மணி நேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை எவ்வளவு சாப்பிடுவாரோ அவ்வளவு உணவு கொடுத்தால் போதும்.

குறிப்பு

உங்கள் குழந்தை போதுமான அளவு சாப்பிடுகிறாரா என்பதை கவனித்து கொண்டிருங்கள். பொதுவாக, முதல் இரண்டு நாளில் உங்கள் குழந்தை 2-3 முறை மலம் மற்றும் சிறுநீர் கழித்திருக்க வேண்டும். அதன் பிறகு, வரும் நாட்களில் குறைந்தது 6 முறையாவது மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டும். அவர்கள் மலம் மஞ்சள் நிறத்தில் மணமற்றதாக இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தை போதுமான அளவு உணவு சாப்பிடவில்லை என்பதை குறிக்கும் சில அறிகுறிகளும் உண்டு.

குழந்தை பிறந்த 2 வாரங்களில், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால், குழந்தைக்கு போதுமான உணவு ( பால் ) கிடைப்பதில்லை என்று அர்த்தம். அதே போல் ஒரு நாளைக்கு 2-3 முறை கூட மலம் கழிக்கவில்லை என்றாலும் குழந்தைக்கு போதுமான உணவு ( பால் ) கிடைப்பதில்லை என்று அர்த்தம். குழந்தை தூங்கிக்கொண்டே இருப்பதும் போதிய உணவில்லாததை குறிக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon