Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்குக்கூட மனஅழுத்தம் ஏற்படுமா? காரணமென்ன?

இன்றைய நவீன நாகரீக சூழலில் மனஅழுத்தம் என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது; முக்கியமாக குழந்தைகள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு உள்ளானால், அவர்களின் இன்றைய உடல் மற்றும் மனநிலை, அவர்களின் வருங்கால எதிர்காலம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளை அவர்தம் குழந்தைப் பருவத்தில் மனஅழுத்தம் ஏதுமின்றி பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையே! அப்படி குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கு என்ன காரணம், குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதை எப்படி அறிவது என்பதனை இப்பதிப்பில் படித்தறிவோம்..!

அறிவது எப்படி?

குழந்தைகள் மனஅழுத்ததில் இருந்தால், அவர்களில் சிலர், தங்களது முகத்தை சோகமாக, கோபமாக தூக்கி வைத்துக்கொண்டு யாருடனும் பேசாது உம்மென இருப்பார்கள்; சில குழந்தைகளோ தங்கள் மனஅழுத்தத்தைக் கோபமாகவும், அதிகமான ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள்; வேறு சிலரோ எப்பொழுதும் கவலையோடு இருப்பார்கள் - இது போன்ற குழந்தையின் நடவடிக்கைகளால் அவர்களின் மனநிலை குறித்து நன்கு அறியலாம்..!

காரணங்கள்..!

1. குடும்பத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் குழப்பங்கள், சண்டைகள், வாக்குவாதங்கள்

2. பெற்றோர்கள் மற்றும் உறவுகளிடையே ஏற்படும் விரிசல் மற்றும் குடும்பங்களின் பிரிதல் 

3. நட்பில், நண்பர்களுக்கிடையே உண்டாகும் குழப்பங்கள், சண்டைகள், வாக்குவாதங்கள், மனவருத்தம்

4. மிகவும் நெருக்கமானவர்களின் பிரிவு மற்றும் ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணிகளின் இறப்பு

5. பெரிதாய் ஏற்படும் இழப்புகள், அதிர்ச்சி அளித்த நிகழ்ச்சிகள்

6. அடிக்கடி உண்டாகும் உடல் உபாதைகள், தொற்று நோய்கள்

7. குழந்தைகளை மற்றவர்கள் தவறாக மனம் புண்படும்படி பேசுதல் மற்றும் அவர்களை தவறாகப் பயன்படுத்துதல்

8. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம் உங்கள் குழந்தையை காயப்படுத்தலாம் 

9. பள்ளியில் மற்றும் வெளியில் ஏற்படும் தொடர்ந்த தோல்விகள்

10. உட்கொண்ட மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்

11. பெற்றோரின் வருத்தம், பல நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்

இது போன்ற காரணங்களால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி மிகவும் அவதிப்படுவார்கள்; குழந்தைகளில் சிலருக்கு இது பரம்பரையாகவும் ஏற்படலாம். ஆகையால் இது போன்ற காரணங்களால், மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகளை பெற்றோர்கள் நன்கு கவனித்து, அவர்களை பாதிக்கும் காரணங்கள் குறித்து அறிந்து அவற்றை சரி செய்ய முயலல் வேண்டும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon