Link copied!
Sign in / Sign up
82
Shares

குழந்தைக்கு வைக்கும் பெயர் எப்படி இருக்க வேண்டும்..??

நம்மில் பலர், ‘எனக்கு குழந்தை பிறந்தால் இந்த பெயர் தான் வைப்பேன்’ என்று திருமணத்திற்கு முன்னரோ அல்லது வித்தியாசமான மனதிற்கு பிடித்த பெயரை கேள்விப்படும் போதோ எண்ணிக் கொள்வதுண்டு; சிலர் குழந்தைகள் கருவில் உருவானவுடனே ஆண் குழந்தையாக இருந்தால் இப்பெயர், பெண்ணாய் இருந்தால் இப்பெயர் என முடிவெடுத்திருப்பர்.  

சில பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின் ஜோதிட, ஜாதகங்கள் கணித்து, குழந்தை பிறந்த 40 தினங்களில், பெயர் சூட்டு விழா நடத்தி குழந்தைக்கு ஜாதகத்தில் கணித்த எழுத்தின் படி, பெயரை தேர்வு செய்து வைப்பர். குழந்தைகளின் பெயரை எப்படி வைக்க வேண்டும்? வைக்கப்படும் பெயர் எப்படி இருக்க வேண்டும் என்று அறியாமல், பல பெற்றோர்கள் அறியாமையுடனே குழந்தைக்கு பெயர் சூட்டிவிடுகின்றனர்.

ஆகையால், குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் எப்படி பட்டதாய் இருக்க வேண்டும் என்று இந்த பதிப்பில், படித்து, இனி பெயரிடத் தொடங்குவோம்..!

1. காலத்தோடு வளர வேண்டும்..!

குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் எத்தனை காலமானாலும் புதிய பெயர் போல், அதாவது குழந்தைக்கு 50 வயது ஆனாலும் அப்பொழுதுள்ள காலத்திற்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டும். குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் காலத்தோடு, குழந்தையோடு வளரும் வகையில் இருத்தல் அவசியம்..!

2. உலகப் பொது..!

குழந்தைகள் பிறந்து வளர்ந்து, அயல்நாட்டிற்கு செல்ல நேர்ந்தாலும் நீங்கள் வைக்கும் பெயர் அந்நாட்டிற்கும் பொருந்தும் வகையில், உலகில் எங்கு சென்றாலும் அனைவரும் விரும்பும் பெயராய் இருக்க வேண்டும் நீங்கள் குழந்தைக்கு வைக்கப் போகும் பெயர்..!

3. தலைப்பெழுத்து (Initials)..

குழந்தைக்கு பெயர் வைத்து, அதன் பின்னணியில் உங்கள் பெயரையோ அல்லது உங்கள் பெற்றோர்களின் பெயரையோ சேர்க்க முடிவெடுத்தீர்களானால், அதனால் உங்கள் குழந்தை பின்னாளில் மகிழ்வான, அவன் சக வயது நண்பர்கள் நீங்கள் வைத்த பெயரை சொல்லி கேலி செய்து, உங்கள் குழந்தையின் மனதை கஷ்டப்படுத்துவர்களா என்பதையெல்லாம் யோசித்து பெயர் சூட்டவும்..!

4. எழுத்துக்கள் (Spelling)..

குழந்தையின் பெயருக்கு தேர்ந்தெடுக்கும் எழுத்துக்கள் எளிதில் எழுதக்கூடியதாய், நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியதாய், அனைவருக்கும் எளிதில் விளங்கக்கூடியதாய் இருக்குமாறு பெயர் வைக்கவும்.

5. கலாச்சாரம்..!

நீங்கள் நம் கலாச்சாரப்படி, பண்பாட்டின்படி குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்பினால், தேவி, தேவா என்று பழைய பெயர்களை தேர்ந்தெடுக்காமல், அபிமன்யு, ஆராதனா என்று எக்காலத்திற்கும் பொருந்தும் பெயர்களை தேர்வு செய்யுங்கள்..!

6. அர்த்தம்..!

குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் சிறந்த அர்த்தங்கள் கொண்டதாயும், குழந்தைகளை ஆசீர்வதிக்கும் முறையில் அமைவதையும் இருத்தல் அவசியம். நாம் என்ன நினைக்கிறமோ அதுவே நடக்கும்- இதை நீங்கள் அறிந்திருப்பீர்; காலம் முழுதும் எல்லோராலும் கூப்பிடக்கூடிய பெயர் ஒரு மனிதனுக்கு முன்னேறும் சக்தியை அதன் அலைகளால் அளிக்கும் என்பதை அறிவீரா? சிந்தித்து பெயர் சூட்டுங்கள்..!

7. சத்தம்..!

குழந்தையின் பெயரை அழைத்தால், அந்த ஒலி, தொனி எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து பெயர் சூட்டவும்; வைக்கப்படும் பெயரால், குழந்தைகள் போற்றப்பட வேண்டுமே தவிர கேலிப்பொருள் ஆகிவிடக் கூடாது.

8. என்றும் புதுமை.!

உங்கள் குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் என்றும் புதுமையாய் இருக்கும் வகையில், அனைவரும் விரும்பி வியக்கும் வகையில் அமைய வேண்டும். இந்த மாதிரி பெயர் சூட்டுகையில், அப்பெயரே குழந்தைக்கு அளவுகடந்த தன்னம்பிக்கையை அளிக்கும் - இது முழுக்க முழுக்க உண்மை..!

9. தனிப்பட்ட தொடர்பு..!

குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர், அவர்களின் வாழ்வின் குறிக்கோளை உணர்த்தும் வகையில், அதை அடைய முப்பொழுதும் தூண்டிவிடக் கூடியதாய் அமைய வேண்டும். குழந்தைகளின் பெயரை அழைக்கும் பொழுது, ஒருவித ஆற்றல் சக்தி உருவாகி, சுற்றியுள்ள சூழ்நிலையை ரம்யமாக்க வேண்டும். குழந்தை தன் பெயரை மிகவும் விரும்பும் வகையில் இருக்க வேண்டும்.

10. இதயத்தைத் தொட வேண்டும்..!

குழந்தைக்கு வைக்கப்படும் பெயர், குழந்தையின் இதயத்திற்கு பிடித்த வகையில், மற்றவர்களின் இதயத்தைக் கவர்ந்து, இதயத்தைத் தொடும்வகையில் இருக்க வேண்டும்.

எனவே, பெற்றோர்களே! மேற்கூறிய தகவல்களை பற்றி யோசித்து, குழந்தைக்கு நல்லதொரு பெயரை சூட்டுங்கள்..! பதிப்பு பயனென்று கருதினால், மற்றோர் பயனடைய பகிருங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon