Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தைக்குத் தாய்ப்பால் ஏன் கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்?

 
பொதுவாக, புதிய தாய்மார்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது - என்ற செயலுக்கும் புதியவர்களே! குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில், அனைத்து தாய்மார்களும் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சில தாய்மார்கள் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் புகட்டாது விட்டுவிடுகின்றனர்; சிலரோ குழந்தையின் தேவைக்கு அதிகமாகவே புகட்டி விடுகின்றனர்; சிலரோ குழந்தை பிறந்த ஆறு மாத காலத்திற்குள் பால்பவுடரை பயன்படுத்துகிறார்கள்..!
 
இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு முடிவுகட்டும் வகையில், இந்தப் பதிப்பில் சில தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்..
 
1. அடிக்கடி பாலுவுட்டுவது..
 
குழந்தைகள் எவ்வளவு அதிகம் தாய்ப்பால் அருந்துகின்றனரோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும்..! எனவே சில மாய் நேரங்களுக்கு ஒரு முறை என பாலூட்டும் பொழுது, ஒவ்வொரு முறையும் குழந்தைக்குப் போதுமான அளவு பால் குடுக்க வேண்டும்.
 
இதுபோல், பாலூட்டும் ஒவ்வொரு முறையும், குழந்தை எவ்வளவு பால் அருந்துகிறதோ, அதே அளவு அல்லது அதற்கும் மேலாக தாய்ப்பால் சுரப்பு நிகழும்.
 
ஆகையால், தாய்மார்களே! குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டத் தொடங்குங்கள்..!!
 
2. குழந்தையின் அமைவிடம்..
 
குழந்தைக்குப் பாலூட்டும் போது, குழந்தையின் அமைவிடம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி குழந்தையை ஏந்த வேண்டும் என வீட்டுப் பெரியவர்கள் அல்லது மருத்துவரிடம், தாய்மார்கள் கேட்டறிவது நல்லது.
 
பால் அருந்துகையில், குழந்தை உறங்கிவிட்டால், மெதுவாக தட்டி எழுப்பி, குழந்தை போதுமான அளவு பாலை அருந்தச் செய்து, பின் உறங்கச் செய்யவும்; எழுப்பியும் எழாது குழந்தை உறங்கினால், சிறிது நேரம் கழித்து, மீண்டும் பால் புகட்டவும்.
 
3. அமைதிப்படுத்தும் அசைவுகள்..
 
குழந்தை பால் பருகுகையில், இரு மார்பகங்களிலும் சரி சமமாக பால் பருகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பால் புகட்டும் போதும், இரு மார்பகங்களிலும் இரு முறை, பால் அருந்தச் செய்தல் வேண்டும். இம்முறைகளை பின்பற்றும் போது, மார்பகங்களில் பால் கட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
 
குழந்தை பால் பருகுகையில், தாயின் மனநிலை அமைதியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். பால் புகட்டுகையில், தாய் தன் மனதிற்குப் பிடித்த பாடல், ஓய்வான மனநிலை, மனதை அமைதி மற்றும் சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்தல் நல்லது.
 
4. மார்பகங்களை அழுத்திவிடுதல்..
 
குழந்தை, பால் அருந்துகையிலோ அல்லது அருந்தி முடித்த பின்னரோ, மார்பகங்களை அழுத்திவிடுதல் நல்லது. குழந்தை, பால் அருந்துகையில், அழுத்திவிடும் போது, குழந்தை அதிகம் உறிஞ்சி எடுக்காது, தாய்ப்பால் குழந்தைக்கு எளிதாகக் கிடைக்கும். பால் புகட்டிய பின், 2-3 முறை அழுத்திவிடுவது, தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கச் செய்யும்.
 
5. உணவு முறைகள்..!
 
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை, மருந்துகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின் உட்கொள்வது நல்லது.
 
குழந்தைக்குத் தாய்ப்பாலில், மட்டுமே தேவையான, மாசில்லாத சத்துக்கள் கிடைக்கும்; இந்த சத்துக்களே, குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். எனவே, தாய்மார்களே! இன்றே குழந்தைக்குப் பவுடர் பால் தவிர்த்து, தாய்ப்பால் புகட்டுவீராக..!
Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
50%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon