Link copied!
Sign in / Sign up
16
Shares

குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த செய்ய வேண்டியது

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. இருப்பினும் குறிப்பிட்ட வயதில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறுத்த வேண்டியதும் அவசியம். ஆனால், குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. தாய்மார்கள் குழந்தைக்கு பாலை நிறுத்த முயற்சிக்கும் போது, அவர்கள் சரியாக சாப்பிடவில்லை எனில் மீண்டும் பால் கொடுக்க துவங்கி விடுவார்கள். குழந்தைகள் வளர்ந்து விட்டால் தாய்ப்பாலை நிறுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். இங்கு குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.  

எப்போது நிறுத்தலாம்

பொதுவாக குழந்தைக்கு ஒன்றுஅல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குப் பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அதனால் அவர்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் இருக்காது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை பால் கொடுப்பதுண்டு. ஒரு வேளை ஒன்றே முக்கால் அல்லது ஒரு வயதாகி 10 மாதங்கள் வரை பால் கொடுத்து விட்டு நிறுத்தி இருந்தால், குழந்தைக்கு 2 வயதாகும் வரை பால் சுரப்பதுண்டு. அதிலும் தவறில்லை. அது தானாகவே சில நாட்களில் குறைந்து விடும்.

புரோட்டின்

புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம். சிலநேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படுவதோடு, குழந்தையின் மனநிலையும் பாதிக்கும். இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது, கவனத்துடன் செயல்பட வேண்டும்.

திட்டமிட்டு, மெதுவாக குழந்தையை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுவே இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாய் அடைபட்டு, வீக்கம் அடையும். மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

தவிர்க்க வேண்டியவை

குழந்தைகளின் முன்பு உடை மாற்றுவதை நிறுத்த வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகத்தை பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது. குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும்போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். உங்கள் குழந்தைகளை திசை திருப்புவதால், அவர்களை எளிதில் தாய்ப்பாலை மறக்க செய்யலாம்.

பால் பாட்டில்

பால் கொடுக்கும் போது, அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அந்த பாட்டிலை, அம்மா குழந்தைக்கு கொடுக்கும் போது, அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால்தான் பால் குடிப்பார்கள், அப்போது அம்மா குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon