Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைக்கு பயன்படுத்தும் சோப்பு - வீட்டில் தயாரிப்பது எப்படி?

நாம் நம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை, தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரங்கள் அல்லது உற்றார் உறவினர் சிபாரிசு செய்யும் பொருளின் இரகங்கள் கொண்டு முடிவு செய்கிறோம்..! ஆனால், அந்த பொருட்கள் எப்படி, எந்தவிதமான மூலக்கூறுகள் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நாம் அறிவதில்லை; அறியாமலேயே குழந்தைக்கு கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம்..! 

இதைப் படித்து விட்டு நீங்கள் கேட்கலாம்.., குழந்தைக்கு தேவைப்படும் சோப்பு, ஷாம்புக்களை நாங்கள் என்ன தயாரிக்கவா முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்களே தயாரிக்க முடியும், அதுவும் 50 ரூபாய்க்குள் 6 சோப்புகளை தயாரித்து விடலாம்..! இப்படி தயாரிக்கப்படும் சோப்பு, மிகவும் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும். நீங்களே தயாரிப்பதால், அது குழந்தைக்கு எந்தவித தீங்கையும் அளிக்காது.

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் சோப்பு பேஸ், அதிக கெமிக்கல்கள் அதாவது வேதிப்பொருள்கள் இல்லாததாக தேர்வு செய்தல் வேண்டும்..!!

மேலும் நீங்கள் ஒரு நாளில் எத்தனை சோப்புகளை வேண்டுமானாலும் தயாரிக்கலாம், சோப்பின் வாசத்தை நீங்கள் நிர்ணயிக்கலாம்..!

Video Credits: Tips and Tricks Facebook Page

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon