Link copied!
Sign in / Sign up
9
Shares

குழந்தைக்கு பாலூட்டும் போது செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா?

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியமானது. தாய்ப்பால் கொடுக்கும்போது பெரும்பாலும் அம்மாக்கள் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ குழந்தையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இங்கு முக்கியமான கேள்வி தாய்ப்பால் கொடுக்கும்போது எப்படி நேரத்தை செலவழிப்பது என்பதுதான்.

தாய்ப்பால் கொடுக்கும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது. இணையத்தை பயன்படுத்துதல் அல்லது வாட்ஸாப், பேஸ்புக்கில் அரட்டை, என இணையம் நம்மை அடிமைப்படுத்தி உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது போனை பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் குழந்தை வளர்ச்சியையும் பாதிக்கும். தாய்ப்பால் கொடுக்கும்போது போனை பயன்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

1 கண்களை பார்த்தல்

ஒரு நல்ல பிணைப்பை உருவாக்க தாய் மற்றும் குழந்தைக்கு இடையே ஒரு குறிப்பிட்ட அளவு கண் தொடர்பு வேண்டும். குழந்தைகள் பிறக்கும்போது, அவர்களின் பார்வை தாயின் முகத்தில் இருந்து வரை மார்பு வரைதான் இருந்து வருகிறது. அதேபோல்தான் அவர்கள் தொடர்ந்து பார்த்துதான் தங்கள் அம்மாவை அடையாளம் கண்டுகொள்வார்கள். யோசித்து பாருங்கள் நீங்கள் போனையே பார்த்துக்கொண்டு இருந்தால் உங்கள் குழந்தை எப்படி உங்களுடன் நல்ல உறவுடன் இருக்க முடியும்.

2 கவனிப்பு

உங்கள் குழந்தை மார்பில் இருப்பதை மறந்து நீங்கள் போனில் மூழ்கியிருப்பீர்கள். நீங்கள் குழந்தையை கவனிக்காமல் போனை பார்ப்பது உங்கள் குழந்தைக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை உணராமல் இந்த கட்டுரையை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

3 தொடுதல்

உங்கள் கைகளை தொலைபேசியில் வைத்துக்கொண்டு இருந்தால், உங்கள் குழந்தை எப்போது தூங்கினார்கள் என்பது கூட தெரியாது. மேலும், உங்கள் குழந்தை போதுமான அளவு மார்பகப் பால் குடித்தார்களா என்று கூட நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. பால் குடிக்கும் போது உங்கள் குழந்தை கீழே விழ வாய்ப்புகள் உள்ளது. எனவே, உங்கள் குழந்தையை பத்திரமாக பிடித்துக்கொள்வது அவசியம்.

4 நடந்துகொள்ளும் முறை

குழந்தைகள் அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் கவனிக்க படவேண்டுமென நினைப்பார்கள். அவர்கள் கவனிக்க படாதபோது நிறைய சத்தங்களை எழுப்புவார்கள். அவர்களின் பிஞ்சு கைகளால் உங்களை தழுவிக்கொண்டே இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள். நீங்கள் அவர்களை கவனிக்கா விட்டாலோ அல்லது பதிலளிக்கா விட்டாலோ அவர்கள் தனிமையாய் உணர்வார்கள். அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் எனவே நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

5 அபாயகரமான கதிர்வீச்சுகள்

குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையானது எனவே அவை போனிலிருந்து வரக்கூடிய கதிவீச்சுகளை எளிதில் உள்வாங்கிக்கொள்ளும். இது மிகவும் அபாயகரமானது இது அவர்களின் மரபணுக்களை பாதிப்பதோடு புற்றுநோய் செல்களை வளர செய்யும். மேலும் மூளை செல்களையும் பாதிக்கும்.

பாலூட்டும்போது போனை உபயோகிக்காமல் இருப்பது எந்தவிதத்திலும் உங்களை பாதிக்கப்போவதில்லை. மாறாக, உங்கள் எடையை குறைப்பதற்கும், குழந்தையுடன் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon